கோவாக்சின் தடுப்பு மருந்து: டெல்லியில் முதல்கட்ட மனித சோதனை தொடக்கம்!
New Delhi: இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கான முதல்கட்ட மனித பரிசோதனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்றைய தினம் தொடங்கியது. இதன் முதல் ஊசி 30 வயது இளைஞர் ஒருவருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் இந்த மனித சோதனைக்கு கடந்த சனிக்கிழமை முதல் 3,500 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் குறைந்தது 22 பேர் வரை சோதிக்கப்படுவார்கள் என எய்ம்ஸில் உள்ள சமூக மருத்துவ மையத்தின் பேராசிரியரும், ஆய்வின் முதன்மை ஆய்வாளருமான சஞ்சய் ராய் கூறியுள்ளார்.
டெல்லியை சேர்ந்த அந்த முதல் தன்னார்வலர் கடந்த 2 நாட்களாக உடல்நிலை முழுவதும் சீராக உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டது. தொடர்ந்து, அவரிடம் எந்தவிதமான நோயுற்ற நிலைகளும் இல்லை.
இதைத்தொடர்ந்து, நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் அவருக்கு 0.5 மில்லி என்ற அளவில் ஊசி போடப்பட்டது. உடனடி பக்க விளைவுகள் எதுவும் இதுவரை காணப்படவில்லை. தொடர்ந்து அவர் எழு நாட்களுக்கு கண்காணிக்கணிக்கப்படுவார் என்று மருத்துவர் ராய் கூறியுள்ளார்.
தொடர்ந்து, இன்னும் சில தன்னார்வலர்களுக்கும் அவர்களது உடல்நிலை சோதனை அறிக்கைகள் வந்ததும் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும்.
கோவாக்சின் தடுப்பு மருந்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவ சோதனைகளை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தேர்ந்தெடுத்த 12 இடங்களில் டெல்லி - எய்ம்ஸ் மருத்துவமனையும் ஒன்றாகும்.
முதலாம் கட்டத்தில், 375 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி பரிசோதிக்கப்படும், அவர்களில் அதிகபட்சம் 100 பேர் எய்ம்ஸிலிருந்து வந்தவர்கள். இரண்டாவது கட்டத்தில் அனைத்து 12 தளங்களிலிருந்தும் சுமார் 750 தன்னார்வலர்கள் ஒன்றாக இருப்பார்கள் என்று அவர் கூறினார்.
இந்த தடுப்பூசி பரிசோதனையின் முதல் கட்டத்தில் 18-55 வயதுடைய எந்தவிதமான நோயுற்ற நிலைமைகளும் இல்லாமல் உள்ள ஆரோக்கியமான நபர்கள் மீது செய்யப்படும். கர்ப்பம் இல்லாத பெண்களும் முதல் கட்டத்தில் சோதனையின் ஒரு பகுதியாக தேர்வு செய்யப்படுவார்கள்.