பதற வைக்கும் வீடியோவில் அந்த நபர் போலீசாரை நோக்கி துப்பாக்கி காட்டுகிறார்.
ஹைலைட்ஸ்
- பதற வைக்கும் வீடியோவில் அந்த நபர் போலீசாரை நோக்கி துப்பாக்கி காட்டுகிறார்
- டெல்லி வன்முறையில் 46 பேர் உயிரிழந்துள்ளனர்
- டெல்லியின் சீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஷாருக்.
New Delhi: கடந்த வாரம் நடந்த டெல்லி கலவரத்தின் போது, போலீசாரை நோக்கி துப்பாக்கி நீட்டிய நபர் உத்தரப் பிரதேசத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் காரணமாக நடந்த வன்முறையில் 46 பேர் உயிரிழந்துள்ளார். மேலும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
ஜாஃபராபாத் பகுதியில் எடுக்கப்பட்ட அந்த பதறடிக்கும் வீடியோவில், சிவப்பு சட்டை அணிந்திருந்த அந்த நபர் கையில் துப்பாக்கியுடன் தென்பட்டார். அப்போது, எதிரில் ஆயுதம் இல்லாமல் வந்த காவலரை நோக்கி துப்பாக்கி காட்டி மிரட்டியதுடன் அவரை திரும்பிச் செல்ல வலியுறுத்தினார்.
துப்பாக்கியுடன் இருந்த அந்த நபர் டெல்லியின் சீலாம்பூர் பகுதியைச் சேர்ந்த ஷாருக் (33) என்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன்னதாக அவர் பெயரில் எந்த குற்றப்பிண்ணியும் இல்லை. எனினும், அவரது தந்தை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாமினில் வெளிவந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
டெல்லி சீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஷாருக் (33)
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர் அருகிலிருந்த கட்டிடத்திலிருந்து எடுத்த அந்த வீடியோவில், கலவரத்தை கட்டுப்படுத்த வந்த காவலர் தீபக் தாஹியா சாலையின் நடுவே நிற்கிறார். 6 பேர் கொண்ட கும்பலுடன் ஷாருக் அந்த காவலரை மிரட்டுகிறார்.
எனினும், துப்பாக்கிக்குப் பயப்படாத காவலர் தீபக் தாஹியா, துணிந்து திரும்பிச் செல்லாமல் அங்கேயே நிற்கிறார். தொடர்ந்து, ஷாருக் அவரை எச்சரிக்கிறார். பின்னர் வானத்தை நோக்கிச் சுடுகிறார். அப்போது, அவருக்குப் பின்னால் கல்வீச்சு சம்பவங்களும், தீ வைப்பு சம்பங்களும் நடைபெறுகிறது.
தொடர்ந்து, இரண்டாவது முறையாக ஷாருக் சுடுவதற்கு முன்பு அங்கிருந்த தள்ளிச் சென்றுவிடுகிறார். இந்த வீடியோ வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறையிலிருந்து வெளிவந்த பலவற்றில் ஒன்றாகும்.