பள்ளி வளாகத்தில் சிறுமி தலை, முகம்,கழுத்து மற்றும் இடுப்பு பகுதிகளில் பலத்த காயங்களுடன் காணப்பட்டார் (Representational)
Cuttack: ஒடிஸா மாநில கட்டாக் மாவட்டத்தில், ஏப்ரல், 2018 இல், ஆறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக 26 வயது இளைஞருக்கு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
“முகமது முஸ்தாக்கிற்கு பிரிவு 302 (கொலை) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் 6 வது பிரிவு ஆகியவற்றின் கீழ் குற்றவாளி என தீர்ப்பளித்த பின்னர் கூடுதல் மாவட்ட மற்றும் சிறப்பு போக்ஸோ நீதிமன்ற நீதிபதி வந்தனா கார் அவருக்கு மரண தண்டனை விதித்தார்” என்று சிறப்பு அரசு வக்கீல் ஏ.கே.நாயக் தெரிவித்தார்.
2018 ஏப்ரல் 21 மாலை சலேப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெகநாத்பூர் கிராமத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் இருந்து சிறுமி தலை, முகம் மற்றும் கழுத்து மற்றும் இடுப்பு பகுதிகளில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் காணப்பட்டார்.
சம்பவம் நடந்த மறுநாளே கிராமத்தைச் சேர்ந்த முஸ்தாக் கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 29, 2018 அன்று எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது சிறுமி இறந்தார்.
சம்பவம் நடப்பதற்கு முன் மாலையில் பிஸ்கட் வாங்குவதற்காக சிறுமி தனது கிராமத்தில் ஒரு பெட்டிக்கடைக்கு சென்றிருந்தாள், அதன்பின் அவளைக் காணவில்லை. பின்னர் அவர் பள்ளி வளாகத்திற்குள் உடலில் உடையின்றி இரத்த வெள்ளத்தில் மயக்கத்தில் கிடந்தார்.
பாலியல் பலாத்காரம் செய்த பின்னர், குற்றவாளி சிறுமியை கொடூரமாக தாக்கியுள்ளார்.
சிறுமி இறந்த பிறகு முஸ்தாக் மீது ஐபிசி பிரிவு 302 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.