This Article is From Oct 17, 2018

ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு செங்கல் அனுப்பிய நிறுவனம்!

அவருக்கு வந்த பார்சலில் செல்போனுக்கு பதிலாக செங்கல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் மனிஷ் கல்யான்கர் கூறினார்

ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு செங்கல் அனுப்பிய நிறுவனம்!

கஜானன் ஆன்லைனில் செல்போனை ஆர்டர் செய்துள்ளார்.

Aurangabad, Maharashtra:

அவுரங்காபாத்தில் ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு, செங்கலை டெலிவரி செய்ததால் அதிர்ச்சியான அந்த நபர், முன்னணி ஆன்லைன் விற்பனையாளர் மீது புகார் அளித்துள்ளதாக இன்று போலீசார் கூறினர்,.

அவுரங்காபாத்தைச் சேர்ந்த கஜானன் கரத் போலீசாரிடம் அளித்த புகாரில், அவர் அக்.9 தேதி ஆன்லைனில் செல்போன் ஒன்றை ஆர்டர் செய்ததாகவும் அதற்கு ரூ.9,134 செலுத்திவிட்டதாகவும் ஹர்சூல் பகுதியின் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனிஷ் கல்யான்கர் கூறியுள்ளார்.

கஜானன் கரத் செல்போன் ஆர்டர் செய்த இ-காமர்ஸ் தளத்திலிருந்து ஒருவாரத்தில் டெலிவரி செய்யப்படும் என்ற தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

கடந்த ஞாயிறன்று ஆன்லைன் தளத்திலிருந்து வந்த பார்சலை திறந்தபோது அதில் செங்கல் இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் உடனே பார்சலை டெலிவரி செய்தநபருக்கு போன் செய்து கேட்டபோது, டெலிவரி செய்வது மட்டுமே எங்களது வேலை பார்சலில் என்ன உள்ளது என்பதை பார்பதல்ல என்று கூறியுள்ளார்.

அதன்பிறகு, இன்று ஹர்சூல் பகுதி காவல்நிலையத்தில் கஜானன் புகார் அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் கூறுகையில், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.


 

Click for more trending news


.