Jammu: ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த, முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
மஹிந்திரா எஸ்.யூ.வி ரக வாகனத்தில் வந்த ஒருவர், நேராக கதவை முட்டி உடைத்துக் கொண்டு அத்துமீறி நுழைந்ததுள்ளார். பின் உள்ளே சென்றவுடன் தோட்டபகுதியில் வாகனத்தை விட்டு விட்டு, வீட்டுக்குள் நுழைய முற்பட்டிருக்கிறார். வழியில் கிடைத்த பொருட்களை எல்லாம் உடைத்து வீசி இருக்கிறார். இதில் சில பொருட்கள் சேதமடைந்தன. தடுக்க முற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளையும் தாக்கியுள்ளார். பாதுகாப்பு காவலர்கள் எச்சரித்தும் கேட்காததால், அந்த நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். ஃபரூக் அப்துல்லாவிற்கு Z பிரிவு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல் நடைபெறும் போது, ஃபரூக் அப்துல்லா வீட்டில் இருக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர் ஜம்மு காஷ்மீரின் பூன்ச் பகுதியை சேர்ந்தவர் என்று அவரது ஆதார் அட்டை தகவல் மூலம், முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.