This Article is From Aug 02, 2018

பிரிந்து சென்ற மனைவியை பழிவாங்க கணவன் அனுப்பிய ஆபாச வீடியோ..!

திருணமாகி ஓராண்டு காலத்துக்குள் பிரிந்து சென்ற மனைவியை பழிவாங்கும் நோக்கில் கணவன் அதிர்ச்சியளிக்கும் ஒரு ஆபாச வீடியோவை அனுப்பியுள்ளார்

Advertisement
நகரங்கள் Posted by

திருணமாகி ஓராண்டு காலத்துக்குள் பிரிந்து சென்ற மனைவியை பழிவாங்கும் நோக்கில் கணவன் அதிர்ச்சியளிக்கும் ஒரு ஆபாச வீடியோவை அனுப்பியுள்ளார். இதையடுத்து, வீடியோ அனுப்பிய நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது போலீஸ்.

ஐதரபாத்தைச் சேர்ந்த விபவாசு என்ற நபர் சென்னையில் வசித்து வருகிறார். அவர், சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளார். ஆனால், கடந்த ஆண்டே, விபவாசு தன்னை துன்புறுத்துவதாக கூறி பிரிந்து சென்றார் அவரின் மனைவி. பின்னர் விபவாசு, மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. மேலும் விபவாசுவை ‘பாலியல் உறவு கொள்ள முடியாதவன்’ என்று அவரின் மனைவியின் தரப்பு உறவினர்கள் கூறியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

இதனால் கோபமடைந்த விபவாசு, இன்னொரு பெண்ணுடன் தான் பாலியல் உறவு வைத்துக் கொள்வதை வீடியோவாக எடுத்து மனைவியின் உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார். இது குறித்து போலீஸுக்கு தெரியபடுத்துவே, விபவாசுவை பல்வேறு பிரிவுகளுக்குக் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளது போலீஸ். ஆபாச வீடியோவை வேறு ஒரு நபர் படம் பிடித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து காவல் துறை விசாரித்து வருகிறது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement