Read in English
This Article is From Nov 15, 2019

Viral video: நேரலை செய்தி தொகுப்பில் பதிவான ஐஸ்கிரீம் திருட்டு

இந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டதிலிருந்து 3.6 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

Advertisement
விசித்திரம் Edited by

ஃபாக்ஸ் ஸ்போர்ஸ்ஸின் நேரடி ஒளிபரப்பின் போது இது நடந்தது

ஃபாக்ஸ்  ஸ்போர்ஸ்ஸின் நேரடி ஒளிபரப்பின் போது ஒரு நபர் மற்றொரு நபரின் கையில் இருக்கும் ஐஸ்கீரிம்மை திருடும்  காட்சி பதிவாகியுள்ளது. இந்த காட்சி இணையத்தில் வைராகிவிட்டது. செய்தி தொகுப்பாளர் ஐஸ் ஹாக்கி விளையாட்டு குறித்த செய்தியை தெரிவிக்கும் போது பின்பக்கம் இந்த திருட்டு சம்பவமும் நிகழ்ந்தது. 

வெஸ்டன் டேவிஸ் என்ற நபர் போனை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரின் கையில் உள்ள ஐஸ்கீரிமை மெதுவாக ஒருவர் திருடுகிறார். டேவிஸ் கையில் ஐஸ்கீரிம் இல்லாததை உணர்ந்து திரும்பும்போது  கூட்டத்தில் மறைந்து விடுகிறார். 

பலரும் இதனை “மிகப்பெரிய திருட்டு” என்று சமூக ஊடகங்களில் பாராட்டுகின்றனர். இதோ திருட்டு காட்சியினை கீழே பாருங்கள். 

Advertisement

இந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டதிலிருந்து 3.6 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். 

சமூக ஊடகங்களில் இது போலியான திட்டமிடப்பட்ட காட்சி என்று கூறியிருந்தனர். அதன்படி வெஸ்டன் டேவிஸும் உண்மையை ஒப்புக் கொண்டார். அவரின் ஐஸ்கிரீம்மை திருடும் நபர் அவரின் நீண்டகால நண்பர் என்று கூறியுள்ளார். ஆனால், இந்த திருட்டு சம்பவம் திட்டமிடப்படாதது என்றே தெரிவித்துள்ளார். 

Advertisement