This Article is From Aug 21, 2020

கொரோனா வார்டில் சிகிச்சை பெறும் நிலையிலும் திருமணம்: வைரல் வீடியோ

திருமணம் செய்த ஒருசில நாளிலேயே கார்லேஸ் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்.

கொரோனா வார்டில் சிகிச்சை பெறும் நிலையிலும் திருமணம்: வைரல் வீடியோ

கொரோனா வார்டில் காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது. 

அமெரிக்காவில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுக் கொண்ட ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்ப உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வரும் ஒருவரை, அவரது காதலி நேரில் சந்தித்து திருமணம் செய்து கொண்டார். 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கார்லேஸ் முனிஸ் என்பவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சான் ஆண்டனியோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அவர் செயற்கை சுவாசக் கருவிகள் மூலம் சுவாசித்து வந்தார். இருப்பினும் நிலைமை மோசமடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையிலும், அவரது காதலி கிரேஸ் என்பவர், தனது காதலனுடன் கைகோர்க்க விரும்பினார். இதனையடுத்து நேரடியாக மருத்துவமனைக்கே சென்று, அவர் சிகிச்சை பெறும் போதே, நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். 

இவ்வாறு திருமணம் செய்த ஒருசில நாளிலேயே கார்லேஸ் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார். அவருடைய உண்மையான காதலே அவர் குணமாகுவதற்குக் காரணம் என்று மருத்துவர்கள் பூரிப்புடன் சொல்கின்றனர். 

கொரோனா வார்டில் காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில் அனைவரும் மாஸ்க் அணிந்தபடி உள்ளனர். காதலி கிரேஸ் கண்களில் ஆனந்த கண்ணீருடன் தன் காதலனை கை கோர்க்கிறார்.

Click for more trending news


.