This Article is From Jul 31, 2020

கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருக்க 'பலே யோசனை'- வைரல் வீடியோவைப் பாருங்க!

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக, ஒருவர் செய்த வினோத காரியத்தைப் பாருங்கள்.

கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருக்க 'பலே யோசனை'- வைரல் வீடியோவைப் பாருங்க!

பிளாஸ்டிக் குமிழிக்குள் இருக்கும் மனிதர்.

கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள மாஸ்க், கையுறை போன்றவற்றை அணிய வேண்டியது அவசியமாகும். ஆனால், ஒரு மனிதர் பாதுகாப்பாக இருக்கிறேன் என்ற பெயரில் காற்றடைத்த பிளாஸ்டிக் பபுள்குள் இருந்து கொண்டு அட்டகாசம் செய்கிறார். யார் அவர்? இந்த சம்பவம் எங்கு நடந்தது? வாருங்கள் பார்க்கலாம்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அருகில் பெல்கிரேவின் என்ற இடம் உள்ளது. இங்கு கொரோனா அச்சத்தால் அனைவரும் பாதுகாப்பான முறையில் வெளியில் சென்று வருகின்றனர். இப்படியான சூழலில் பிளாஸ்டிக் பலூன் போன்ற குமிழிக்குள் ஒருவர் இருந்து கொண்டு மெயின் ரோட்டில் வலம் வருகிறார்.

மேலும், 'நான் குமிழிக்குள் இருக்கிறேன். பாதுகாப்பாக இருக்கிறேன்' என்று பாடல் பாடி உற்சாகத்துடன் நடந்து செல்கிறார். பொதுவாக கொரோனா வைரஸ் காற்றின் மூலமாகவும், தொடுதல் மூலமாகவும் பரவுகிறது. இவர் குமிழிக்குள் இருப்பதால், கொரோனா வைரஸ் எந்த விதத்திலும் இவரைத் தாக்க வாய்ப்புகள் இல்லை.

குமிழிக்குள் இவர் பாதுகாப்பாக இருந்து நகர்வலம் வருவதை ஜான் ரிக்பி என்பவர் வீடியோ எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இதனையடுத்து அந்தக் காணொலி, சில மணி நேரங்களில் பல ஆயிரம் பார்வைகளைப் பெற்றன. இன்று வரையில் இந்த வீடியோ சுமார் 1.6 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது:

இந்த வீடியோவுக்குப் பல்வேறு தரப்பினரும் கமெண்ட் எழுதி வருகின்றனர். நல்ல பாதுகாப்பான ஏற்பாடுதான் என்று சிலரும், இது போலியானது என்று சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Click for more trending news


.