Read in English
This Article is From Dec 19, 2018

பக்கத்து வீட்டுல இப்படியொரு தாத்தா கிடைத்தால் நீங்களும் லக்கிதான்!

தன் மறைவுக்கு முன் பக்கத்து வீட்டுக்காரரின் மகளுக்கு, கிருஸ்துமஸ் பரிசு வாங்கி அசத்திய நபர்!

Advertisement
விசித்திரம் (c) 2018 The Washington Post

14 வருடங்களுகு கிருஸ்துமஸ் பரிசு வாங்கி அசத்திய நபர்

ஓவென் வில்லியம்ஸ் மற்றும் அவரது மனைவி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வேல்ஸ் நாட்டுக் குடிபெயர்ந்தபோது, அவர்களின் பக்கத்து வீட்டிலுள்ள வாட்சன்னுடன் நட்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ஓவெனுக்கு பெண் குழந்தை பிறந்தது. கார்டி என பெயரிடப்பட அப்பெண் குழந்தைக்கு, வாட்சன் தாத்தாவாக மாறி கார்டியுடன் விளையாடியுள்ளார். இப்படியே நாட்கள் சென்ற நிலையில் கடந்த அக்டோபர் மாதம் வாட்சன் மறைந்தார். அவரின் மறைவுக்குப் பின், வாட்சனின் மகள் ஒரு பை நிறைய பரிசுகளுடன் ஓவனின் வீட்டிற்கு வந்தார். 

அதில் கார்டிக்காக தனது தந்தை வாங்கிய பரிசுகள் என கொடுத்து சென்றார். அதை திறந்து பார்த்தபோது நிறைய பரிசுகள் இருந்ததால் குழப்பமடைந்த ஓவன் சமூக ஊடகங்களில் இச்சம்பவத்தை வெளியிட்டார்.

இணையத்தில் வைரல் ஆன இச்சம்பவத்தை பற்றி பலர் தங்களது கருத்துக்களை கூறினர். மேலும் அதிகபட்ச மக்கள் அப் பரிசுகளை ஓவ்வொரு ஆண்டு  கிருஸ்மஸ்ஸிற்கு ஒரு பரிசு என்ற வகையில் கொடுக்க அறிவுரை வழங்கினார்.

Advertisement

மேலும் பலர் தங்களது பக்கத்து வீட்டார் யார் என்று கூட தெரியவில்லை என்றும். இப்படி பட்ட ஒரு தாத்தா கிடைத்த கார்டி மிகவும் அதிஷ்டவசமானவள் என்று பலர் கூறினர்.

மேலும் ஓவனும் தனது மகளுக்கு இந்த பரிசுகளை ஒவ்வொரு ஆண்டும் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement