This Article is From Oct 20, 2018

மரணம் குறித்து ஏமாற்றி மாளிகையில் உள்ளாசமாக வாழ்ந்து வந்தவர் பிரான்ஸில் கைது..!

உக்ரேனைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது சொந்த மரணத்தை போலியாக்கி, பிரான்ஸில் உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார்

மரணம் குறித்து ஏமாற்றி மாளிகையில் உள்ளாசமாக வாழ்ந்து வந்தவர் பிரான்ஸில் கைது..!

பர்கண்டியில் அந்த நபர் பிடிபட்டபோது அவரிடம் மாளிகை வீடும் வின்டேஜ் கார் மற்றும் சால்வேடர் டாலியின் சில கலை வேலைப்பாடுகளும் கிடைத்தன

உக்ரேனைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது சொந்த மரணத்தை போலியாக்கி, பிரான்ஸில் உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த யூரோபோல் போலீஸ் அமைப்பு, அவரது மாளிகையில் சுற்றி வளைத்துக் கைது செய்துள்ளது.

உக்ரேனைச் சேர்ந்த அந்த நபர், “கிங் ஆப் காசட்ல்” என்று அழைக்கப்படுகிறார். யூரோபோலால் விசாரணை செய்த போது அவர் பர்கண்டியில் உள்ள மாளிகையில் வசிப்பதாகவும் அவரிடம் மாளிகை வீடும் வின்டேஜ் கார் மற்றும் சால்வேடர் டாலியின் சில கலை வேலைப்பாடுகளும் உள்ளதாக தெரியவந்தது.

யூரோபோல் ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கையில் அந்த மாளிகை மற்றும் கார்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றின் மதிப்பு சுமார் மூன்று மில்லியன் யூரோக்கள் இருக்கும் என்று தெரிகிறது.

மேலும் விசாரணையில் அவர் உக்ரேனில் ஊழல் செய்த குற்றத்துக்காகவும் மற்றும் பல பணமோசடி வழக்கில் சிக்கியிருந்தவர் என்பதும் தெரிய வந்தது. அந்தப் பிரச்னைகளை சமாளிக்க தான் மரணமடைந்து விட்டது போல் பொய்யான சான்றிதழ்களை வைத்து தப்பித்ததாகவும் தெரியவந்தது.
 

இந்த நிலையில் அம்மனிதரின் பெயர் வெளியே குறித்து யூரோபோல் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ஆனால, பிபிசி மற்றும் உக்ரேனின் புலனாய்வு வல்லுநர்கள், அவர் ‘மலினோவிஸ்கே' எனக் கூறுகின்றனர். இச்சம்பவம் ட்விட்டரில் வைரலாகியுள்ளது.

Click for more trending news


.