Read in English
This Article is From Nov 03, 2018

மனைவி தற்கொலை செய்துகொள்ள உதவிய கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறை!

மோரன்ட் தன் மனைவி தற்கொலை செய்துள்ள, கருவி வாங்கித் தர உதவியுள்ளார்

Advertisement
உலகம்

2014-ம் மனைவியின் தற்கொலைக்கு காரணமாக இருந்ததால், இப்போது குற்றயுணர்ச்சிக்கு ஆளாகியுள்ளார்.

Sydney:

ஆஸ்திரேலியாவில் ஒருவர் தன்னுடைய மனைவி தற்கொலை செய்துகொள்ள உதவியதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனைப் பெற்றுள்ளார்.

கிராஹம் மோரன்ட் (69), கடந்த மாத கவுன்சிலிங்கில் குற்றயுணர்ச்சி அடைந்து தன் மனைவி தற்கொலைக்கு உதவியதாக ஒப்புக்கொண்டார். இந்தச் சம்பவம் கடந்த 2014-ம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. அவர் மனைவி கடும் முதுகு வலியால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், மிகுந்த மன உளைச்சலிலும் இருந்துள்ளார். 2017-ம் ஆண்டு அவரது மனைவி ஜெனிஃபர் தற்கொலை செய்து கொள்ள விரும்பிய போது அதற்கு உதவியதாக கூறியுள்ளார்.

குயின்ஸ்லாந்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு இந்த வழக்கு வந்தபோது அதில் பதிலளித்த மோரன்ட் ''என் மனைவி தற்கொலை செய்துகொள்ள கருவியை வாங்கிக் கொடுத்து தற்கொலைக்கு உதவியாக இருந்தேன்" என்றார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி "டேவிஸ், மோரன்ட்டின் மனைவிக்கு ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி இருந்துள்ளது அது 10 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ளது. இதனை பெறுவதற்காகவே அவரது இயலாமையை பயன்படுத்தி மோரன்ட் தனது மனைவியை தற்கொலைக்கு தூண்டியுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளது" குறித்து கேள்வி எழுப்பினார்.

மேலும் நீதிமன்றத்தில் இந்த பணத்தை வைத்து ஆன்மீக பணிகளை செய்யவிருப்பதாகவும், அது தன் பாவங்களை போக்கும் என்றும் மோரன்ட் கூறியுள்ளார். இது போன்ற வழக்கை குயின்ஸ்லாந்து நீதிமன்றம் சந்தித்ததில்லை என்றும் கூறியுள்ளது.

Advertisement
Advertisement