Lucknow: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள புலாந்தர்சகர் நகரில் காவல்துறை அதிகாரி சுபோத் குமாரை பசு குண்டர்கள் 400 பேர் கூட்டாக இணைந்து கொன்றனர்.
அதில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற முதல் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்ஸ்பெக்டர் சுபோத் குமாரை கோடாரியால் தாக்கிய கள்வா என்ற நபரை கைது செய்துள்ளனர்.
இன்ஸ்பெக்டர் சுபோத் குமாரை பசுவதை செய்யப்படுவதாக கூறி திட்டமிட்டு வரவழைத்தனர். அவரை 400 பேர் கூட்டாக சேர்ந்து கல்லால் அடித்து அவரை துன்புறுத்தி அவருடைய துப்பாக்கியை எடுத்து அவரை சுட்டுக் கொன்றனர். பின் அவருடைய எஸ்.யூ.வி வாகனத்தையும் கைவிட்டு சென்றனர். அந்த கும்பலில் ஒருவர் எடுத்த வீடியோவில் பிராசாந்த் நட்(துப்பாக்கியால் சுட்டவன்), கள்வா (கோடாரியால் தாக்கியவன்), மற்றும் மூன்றாவது மனிதரான ஜானி (துப்பாக்கியை பறித்தவன்) ஆகிய மூவரின் முகமும் தெளிவாக பதிவாகியுள்ளது.
இதில் ஜானிக்கு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. ராணுவ வீரர் ஜிட்டேந்திர மாலிக் என்பவர் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக காவலில் உள்ளார். ஆனால் இவருக்கு எதிராக எந்தவொரு சாட்சிகளும் இல்லை.