This Article is From Jun 19, 2018

மண்ட்சூர் துப்பாக்கிசூடு ஏன்..? - ம.பி அரசு அறிக்கை

மத்திய பிரதேச மண்ட்சூரில் விவசாயிகள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது ஏன் என்பதை கண்டறிய அந்த மாநில அரசு சார்பில் விசாரணை ஆணையம் அமைத்தது

மண்ட்சூர் துப்பாக்கிசூடு ஏன்..? - ம.பி அரசு அறிக்கை

விவசாயிகள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட நிழற்படம்

ஹைலைட்ஸ்

  • கடந்த ஆண்டு ஜூன் 6-ம் தேதி இந்த சம்பவம் நடந்தது
  • இதில் 6 விவசாயிகள் கொல்லப்பட்டனர்
  • இதையடுத்து, விஷயம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டது
மத்திய பிரதேச மண்ட்சூரில் விவசாயிகள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது ஏன் என்பதை கண்டறிய அந்த மாநில அரசு சார்பில் விசாரணை ஆணையம் அமைத்தது. அந்த ஆணையம் தற்போது விசாரணையை முடித்து அறிக்கை சமர்பித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு கூடுதல் விலை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் ஜூன் 6 ஆம் தேதி தீவிரமடைந்தது. இதையொட்டி, போலீஸ் மண்ட்சூரில் துப்பாக்கிசூடு நடத்தினர். இந்த துப்பாக்கிசூட்டில் 5 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஜூன் 6 ஆம் தேதி துப்பாக்கிசூட்டில் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இன்னொரு விவசாயி உயிரிழந்தார். மொத்தம் 6 பேர் உயிரிழந்த இந்த சம்பவம் தேசிய அளவில் விவாதப் பொருளானது. 

இதையடுத்து, விவசாயிகளுக்கு நீதி கேட்டு பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ஜெயின் தலைமையில் துப்பாக்கிசூடு குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டது. தற்போது விசாரணை முடிந்து இந்த ஆணையம் அறிக்கை சமர்பித்துள்ளது. 

அந்த அறிக்கையில், ‘ஜூன் 6 ஆம் தேதி மண்ட்சூரில் போராட்டம் தீவிரமடைந்தது. போலீஸ் தங்களை தற்காத்துக் கொள்ள துப்பாக்கிசூடு நடத்தியது. இந்த துப்பாக்கிசூடு அன்று தவிர்க்க முடியாததாக இருந்தது’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நடந்த போது, விவசாயிகள் யாரும் இறக்கவில்லை என்று மத்திய பிரதேச அரசு சொல்லி வந்த நிலையில், அறிக்கையில் 6 விவசாயிகள் இறந்ததை ஒப்புக் கொண்டது. 
.