லாட்ஜ் ஒன்றில் தற்கொலை நடந்துள்ளது.
Mangaluru: காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மனம் உடைந்துபோன காதல் ஜோடி, எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது.
கர்நாடக மாநிலம் மங்களூரு கல்லூரி ஒன்றில் படித்து வருபவர்கள் விஷ்ணு, கிரிஷ்மா. இவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில், அதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று இருவரும் லாட்ஜ் ஒன்றில் ரூம் புக் செய்துள்ளனர்.
சனிக்கிழமை மாலை இருவரும் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இந்த சம்பவம் லாட்ஜ் ஊழியர் ஒருவருக்கு தெரிந்துள்ளது. இதையடுத்து, அவர் அளித்த தகவலின்பேரில் விஷ்ணுவும், கிரிஷ்மாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று மதியம் விஷ்ணுவும், மாலையில் கிரிஷ்மாவும் உயிரிழந்தனர். இந்த தகவல் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.