This Article is From May 15, 2019

’மோடி ஒரு கோழை’.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மணிசங்கர் அய்யர்!

கடந்த 2017ல் மோடி குறித்து அவர் எழுதியது குறித்து மணி சங்கர் அய்யரிடம் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், அவர் தனது நிதானத்தை இழந்தார்.

’மோடி ஒரு கோழை’.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மணிசங்கர் அய்யர்!

பத்திரிகையாளர்களை எச்சரித்த மணிசங்கர் அய்யர்.

Shimla:

காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, மோடியை ‘இழிபிறவி' என்று ஏற்கனவே கூறியதை குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, மைக்கை தூக்கி எறிந்து கடுமையாக நடந்து கொண்டார். மேலும், அவர் பிரதமர் மோடியை ஒரு கோழை என்றும் கூறினார்.

பஞ்சாப் அரசு விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த மணிசங்கர் அய்யரிடம், கடந்த 2017ல் மோடி குறித்து அவர் எழுதிய கட்டுரை குறித்து கேள்வி எழுப்பினர். அதில், கடும் கோபமடைந்து அவர், இந்தியாவில் நரேந்திர மோடி என்று ஒரு நபர் உள்ளார் உங்களுக்கு தெரியுமா? அவரது துள்ளிய தாக்குதல் குறித்து உங்களுக்கு தெரியுமா? அவரிடம் போய் கேள்வி கேளுங்கள் என்று இந்தியில் கூறினார்.

தொடர்ந்து, அவர் உங்களிடம் பேசமாட்டார்.. அவர் ஒரு கோழை.. அவர் ஊடகங்களிடம் பேசமாட்டார் என்று அவர் கூறியுள்ளார். மேலும், மைக்கை தூக்கி எறிந்து கடுமையாக நடந்து கொண்ட அவர், தொடர்ந்தும் தம்மிடம் கேள்வி கேட்க முயன்ற பத்திரிகையாளர்களை, என்னிடம் எந்த கேள்வியும் கேட்க வேண்டாம் எனவும் எச்சரித்தார்.

மற்றொரு தரப்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், எனது கட்டுரையின் ஒரு வரியை வைத்து கொண்டு ஊடகங்கள் விளையாடும் விளையாட்டில் நான் தலையிட விரும்பவில்லை என்றார். நான் ஒரு முட்டாள், ஆனால் அத்தகைய ஒரு பெரிய முட்டாள் அல்ல," என்று அவர் கூறினார்.

2017-ம் ஆண்டு பிரதமர் மோடியை 'நீச் ஆத்மி' (இழிபிறவி) என விமர்சித்ததால் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார் மணிசங்கர் அய்யர். பின்னர் அவர் மன்னிப்புக் கேட்டார்.

.