மொத்தம் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது
Muzaffarpur: முன்னாள் பிரதமர் மன்மோகனை விமர்சித்து திரைப்படம் எடுத்தது தொடர்பாக நடிகர் அனுபம் கேர் உள்பட மொத்தம் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தி ஆக்ஸிடென்ஷியல் பிரைம் மினிஸ்டர் என்ற புத்தகத்தை மையமாக வைத்து மன்மோகன் சிங்கை விமர்சித்து படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் மன்மோகன் வேடத்தில் மூத்த நடிகர் அனுபம் கேர் நடித்திருக்கிறார். மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்தபோது அவரது ஊடக ஆலோசகராக சஞ்ஜெய் பாரு இருந்தார்.
அவர் சமீபத்தில் விபத்தால் பிரதமர் ஆனவர் என்று பொருள்படும் "The Accidental Prime Minister" என்ற புத்தகத்தை வெளியிட்டார். இது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதனை மையமாக வைத்து மன்மோகன் வேடத்தில் பாஜக ஆதரவாளரான அனுபம்கேர் நடித்தார். இதற்கு காங்கிரசார் முன்பே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அனுபம்கேர் உள்பட மொத்தம் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்து. உத்தர பிரதேச மாநிலம் முசாபர்பூர் நகர் போலீசில் இந்த வழக்கு பதிவாகி இருக்கிறது.