This Article is From Oct 18, 2019

“இப்படியே பேசிட்டு இருந்தா…”- Nirmala Sitharaman-க்கு Manmohan Singh சரமாரி கேள்வி!

Manmohan Singh takes on Nirmala Sitharaman - "எல்லாவற்றுக்கும் காரணம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிதான் என்று சொல்ல முடியாது"

Manmohan Singh takes on Nirmala Sitharaman - "தற்போது இருக்கும் பொருளாதாரப் பிரச்னைக்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம் என்று தொடர்ந்து சொல்லி வருகிறது மத்திய அரசு. ஆகவேதான், அதை சரிசெய்ய இவர்களுக்கு ஒரு தீர்வும் கிடைக்கவில்லை"

New Delhi:

இந்தியப் பொருளாதாரம் பற்றி மத்திய அரசுக்கும், காங்கிரஸுக்கும் தொடர்ந்து வாதப் போர் நடந்து வரும் நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றி அடுக்கடுக்காக விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 

முன்னதாக நிர்மலா சீதாராமன், “ரகுராம் ராஜன், இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி கருத்து கூறி வருகிறார். நானும் ஒரு உண்மையைச் சொல்லியாக வேண்டும். மன்மோகன் சிங் பிரதமராகவும், ரகுராம் ராஜன் ஆர்பிஐ கவர்னராகவும் இருந்தபோதுதான் இந்திய பொதுத் துறை வங்கிகள் மிகவும் சிரமப்பட்டன” என்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உரையாற்றியபோது தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மன்மோகன் சிங், “நிர்மலா சீதாராமன் சொன்னது பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. ஆனால், பொருளாதாரத்தை சீர் செய்ய வேண்டும் என்று ஒருவர் நினைத்தால், அதன் சரியான நிலை என்ன என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், தற்போது இருக்கும் பொருளாதாரப் பிரச்னைக்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம் என்று தொடர்ந்து சொல்லி வருகிறது மத்திய அரசு. ஆகவேதான், அதை சரிசெய்ய இவர்களுக்கு ஒரு தீர்வும் கிடைக்கவில்லை.

s567f7i

நிதியமைச்சர் Nirmala Sitharaman, Manmohan Singh மற்றும் Raghuram Rajan மீது பல குற்றச்சாட்டுகளை சொல்லி இருந்தார்

நான் பிரதமராக இருந்தபோது சில விஷயங்கள் நடந்தனதான். அப்போது சில சறுக்கல்கள் இருந்தன. ஆனால், எல்லாவற்றுக்கும் காரணம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிதான் என்று சொல்ல முடியாது. நீங்கள் 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறீர்கள். அனைத்தையும் ஐ.மு.கூ ஆட்சி மீதே சுமத்த முடியாது” என்று பொங்கியுள்ளார். 

சில நாட்களுக்கு முன்னர் ராஜன், “நாட்டில் உள்ள அமைப்புகளுக்கு மத்தியிலான நல்லிணக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிதான் இந்தியாவின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் என நினைக்கிறேன். பெரும்பான்மை வாதம் பேசிக் கொண்டிருப்பது தேர்தல்களை வெல்வதற்கு சில காலம் வரை பயன்படலாம். ஆனால், அது இந்தியாவை ஒரு நிச்சயமற்ற இருளான பாதைக்கு அழைத்துச் செல்கிறது” என்று மோடி அரசை விமர்சித்தார். 

இதைத் தொடர்ந்துதான் நிர்மலா சீதாராமன், ரகுராம் ராஜன் மற்றும் மன்மோகன் சிங்கை தாக்கி கருத்து தெரிவித்தார்.


 

.