எஸ்.பி.ஜி பாதுகாப்பு என்பது நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களுக்குக் கொடுக்கப்படுவதாகும்
New Delhi: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புப் பாதுகாப்புக் குழு செக்யூரிட்டியான எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இனி அவருக்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் மூலம் பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
எஸ்.பி.ஜி பாதுகாப்பு என்பது நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களுக்குக் கொடுக்கப்படுவதாகும். பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோருக்கு எஸ்.பி.ஜி செக்யூரிட்டி பாதுகாப்புதான் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல முன்னாள் பிரதமர்களான தேவ கவுடா மற்றும் வி.பி.சிங் ஆகியோரின் எஸ்.பி.ஜி பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் வருவதை கணித்து, முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்படும்.
மன்மோகன் சிங்கின் மகள், இதற்கு முன்னரே, தனக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு வேண்டாம் என்று தெரிவித்துவிட்டார். அதைப் போலவே முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வளர்ப்பு மகளும், எஸ்.பி.ஜி செக்யூரிட்டி வேண்டாம் என்று கூறிவிட்டார்.