New Delhi: ஓவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி வானொலியில் பேசி வருகிறார். அகில இந்திய வானொலியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய பிரதமர், உலகிலேயே மிக பழமையான தமிழ் மொழியால் இந்தியா பெருமை கொள்கிறது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ் மொழியின் சிறப்பை மோடி புகழ்ந்து பேசினார். அதனை தொடர்ந்து, சகோதரத்துவத்தை கொண்டாடும் ரக்ஷாபந்தன் பண்டிகையையொட்டி, நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற இந்தியர்களை பாராட்டினார். மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மாநிலத்தில், நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவை நினைவு கூர்ந்த மோடி, நாட்டின் சிறந்த நிர்வாகத்தை வாஜ்பாய் அரசு அறிமுகப்படுத்தியது என்று கூறினார். இன்று, 47வது முறையாக ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.