This Article is From Jul 26, 2020

மனதின் குரல் நிகழ்ச்சியில் கார்கில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி!

“நம்முடைய ஆயுதப்படைகளின் தைரியத்திற்கு நன்றி. கார்கில் போரில் இந்தியா பெரும் பலத்தைக் காட்டியது. 21 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த லடாக்கின் கார்கிலில் உள்ள அனைத்து பகுதிகளையும் இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது.

மனதின் குரல் நிகழ்ச்சியில் கார்கில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி!

மான் கி பாதில் பிரதமர் நரேந்திர மோடி கார்கில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.

New Delhi:

இன்று காலை மனதின் குரல் நிகழ்ச்சியில்  பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பாகிஸ்தானுடன் இந்தியா நட்பு உறவுகளை நிலைநிறுத்த முயற்சித்த போதிலும் அது இந்தியாவின் முதுகில் குத்திவிட்டது.” என கூறி கார்கில் தியாகிகளுக்கு அஞ்சலியை தெரிவித்திருந்தார். மேலும், “இந்தியாவின் நிலத்தை கைப்பற்றுவதற்கும் அதன் தற்போதைய உள்நாட்டு மோதல்களைத் திசைதிருப்புவதற்கும் மோசமான திட்டங்களுடன் பாகிஸ்தான் இந்த தவறான முயற்சியை பாகிஸ்தான் மேற்கொண்டது.” என்றும் மோடி தெரிவித்துள்ளார். மேலும்,

“எந்த காரணமும் இல்லாமல் எல்லோரிடமும் பகை வைத்திருப்பது துன்மார்க்கரின் இயல்பு என்று கூறப்படுகிறது. அத்தகைய இயல்புடையவர்கள் தங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கு கூட தீமையை செய்ய நினைக்கிறார்கள். அதனால்தான் இந்தியாவின் நட்பு முயற்சிகளுக்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் முதுகில் குத்த முயன்றது. ஆனால் இந்தியாவின் துணிச்சலான ராணுவத்தின் வீரம் மற்றும் வலிமையை உலகம் கண்டது." என்று பிரதமர் கூறினார்.

“நம்முடைய ஆயுதப்படைகளின் தைரியத்திற்கு நன்றி. கார்கில் போரில் இந்தியா பெரும் பலத்தைக் காட்டியது. 21 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த லடாக்கின் கார்கிலில் உள்ள அனைத்து பகுதிகளையும் இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது. இந்த போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த போரில் 500க்கும் அதிகமான வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.