பிரதமர் நரேந்திர மோடி இன்று மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசினார்.
New Delhi: சமீபத்தில் லடாக்கின் கிழக்குப்பகுதியான கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய சீன ராணுவ வீரர்களிடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் நிகழ்ச்சியில், “லடாக்கில் இந்திய நிலப்பரப்பினை ஆக்கிரமிக்க நினைத்த சீனாவுக்கு இந்தியா தகுந்த பதிலடியை கொடுத்துள்ளது.“ என கூறியுள்ளார். மேலும், “இந்த சம்பவத்திற்கு பின்னர் மக்கள் சீன பொருட்களை புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர். இது பொருளாதார ரீதியாக சீனாவிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“இந்தியா சர்வதேச நாடுகளுடன் நடப்பு கொள்ளும் அதே அளவிற்கு சிக்கல் வரும் சூழலில் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் நாடு தயாராக உள்ளது. நமது வீரர்கள், தாய் நாட்டின் கவுரவத்தினை களங்கப்படுத்த யாரையும் அனுமதிக்கமாட்டார்கள்.“ என்றும் மோடி கூறியுள்ளார்.