Read in English
This Article is From Oct 14, 2018

ஒரு மாத சிகிச்சைக்குப் பின் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மனோகர் பாரிக்கர் டிஸ்சார்ஜ்

உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோவா முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கர் 7 மாதங்களுககு பின்னர் வீடு திரும்பியுள்ளார்

Advertisement
நகரங்கள்

எய்ம்ஸ் மருத்துவமனையில் பாரிக்கர் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார்

New Delhi:

முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும், கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கருக்கு கணைய பாதிப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று அதிகாலையில் மனோகர் பாரிக்கரின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவரை தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தோம். பின்னர் உடல் நிலைமை சீரடைந்தது. இதன்பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரிக்கரின் சிகிச்சை குறித்து ஆயுஷ் இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக் கூறுகையில், கடந்த 15 நாட்களாக மனோகர் பாரிக்கரின் உடல் நிலைமை சீரடைந்து வந்தது. நான் இன்னும் சில நாட்களுக்கு அவர் எய்ம்ஸில் இருந்து சிகிச்சை பெற வேண்டும் என விரும்பினேன் என்று கூறியுள்ளார்.

Advertisement

கடந்த 7 மாதங்களாக பாரிக்கருக்கு கோவா, மும்பை, நியூயார்க், டெல்லி ஆகிய இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த வெள்ளியன்று தனது அமைச்சரவை சகாக்களுடன் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைத்து பாரிக்கர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் பாரிக்கர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

Advertisement
Advertisement