கணைய பாதிப்பு காரணமாக மனோகர் பாரிக்கர் கடந்த 7 மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.
Panaji: முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும், கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கருக்கு கணைய பாதிப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
கடந்த 7 மாதங்களாக பாரிக்கருக்கு கோவா, மும்பை, நியூயார்க், டெல்லி ஆகிய இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த வெள்ளியன்று தனது அமைச்சரவை சகாக்களுடன் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைத்து பாரிக்கர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் பாரிக்கர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
இதற்கு கோவா மாநில பாஜக தலைவர் விஜய் டெண்டுல்கர் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “மனோகர் பாரிக்கரின் உடல் நிலை சிறப்பாக உள்ளது. அவர் பதவியை ராஜினாமா செய்வார் என்று தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. பாரிக்கர் தலைமையிலான கோவா பாஜக அரசு 5 ஆண்டு காலத்தை பூர்த்தி செய்யும். பாரிக்கர் ராஜினாமா செய்யமாட்டார். 5 ஆண்டுகளுக்கும் அவர் முதல்வராக பதவியில் நீடிப்பார் என்று கூறினார்.