லக்னோவில் உள்ள ரிசர்வ் போலீஸ் கேம்பை பார்வையிட்ட ராஜ்நாத் சிங்
Lucknow: உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் சிறப்பு அதிரடிப்படையினரின் 26-வது ஆண்டுவிழா நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது –
நாடு முழுவதும் மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். இதனால் மாவோயிஸ்டு பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 126-ஆக குறைந்துள்ளது.
அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மாவோயிஸ்டுகளை முழுவதுமாக ஒழித்து விடுவோம். இது ரிசர்வ் போலீசாரின் வீரம், தியாகம், மன வலிமை மற்றும் கடின உழைப்பு மூலமாக சாத்தியப்படும்.
இந்த ஆண்டில் மட்டும் 131 மாவோயிஸ்டுகளை ரிசர்வ் போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். 1,278 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 58 பேர் சரண் அடைந்திருக்கிறார்கள்.
ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதி. அங்கு சில இளைஞர்கள் தவறாக வழி நடத்தப்பட்டு தீவிரவாதிகளாக மாற்றப்படுகின்றனர். அங்கு நம் பாதுகாப்பு படை வீரர்களின் பணி போற்றத் தகுந்தது. கடமையை நிறைவேற்றும்போது அதிரடிப்படையினர் யாருக்கும் அச்சப்பட வேண்டாம்.
ஒருவர் தீவிரவாதத்தில் ஈடுபடுகிறார் என்றால் அவர்களை ஒழிக்கும் பணியில் யாரும் உங்களுக்கு தடையாக இருக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.