This Article is From Nov 08, 2018

தேர்தலை சீர்குலைக்க சத்தீஸ்கரில் பஸ் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் - 5 பேர் உயிரிழப்பு

Chhattisgarh Maoist Attack: சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற்காக மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வெடிகுண்டு வைத்து பஸ் தகர்க்கப்பட்டதாக தகவல்

Dantewada:

Chhattisgarh Maoist Attack: சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் மாவோயிஸ்டுகள் பஸ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பஸ்ஸில் இருந்தவர்கள் பலருக்கு படுகாயம் ஏற்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக வரும் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.இதனை சீர்குலைக்கும் முயற்சியில் மாவோயிஸ்டுகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அவர்கள் ஆதிக்கம் அதிகம் நிறைந்த தண்டேவாடா மாவட்டத்தில் பஸ் ஒன்றின் மீது வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்தினர்.

இங்குள்ள பச்சேலி மலைப்பகுதியில் பாதுகாப்பு படையினரும் பொதுமக்களும், தங்களுக்கு தேவையான பொருட்களை மார்க்கெட்டி வாங்கிக் கொண்டு திரும்பியுள்ளனர். அப்போதுதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் துணை ராணுவ வீரர் ஒருவர் உள்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். சத்தீஸ்கரில் இன்னும் 4 நாட்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. நாளை பிரதமர் மோடி, சம்பவம் நடந்திருக்கும் தண்டேவாடாவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள ஜக்தால்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியிருப்பது சத்தீஸ்கரில் (Maoist Attack in Chhattisgarh) பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. 8 நாட்களுக்கு முன்பாக 2 போலீசார் மற்றும் தூர்தர்ஷன் டிவியின் கேமராமேன் ஆகியோர் தண்டேவாடாவின் அரன்பூர் கிராமத்தில் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டனர்.

.