This Article is From Jul 09, 2019

கத்தியே பாட்டில் மூடியை தெறிக்கவிட்ட பாடகி- #BottleCapChallenge-ன் வின்னர் இவர்தாங்க!

இந்த #BottleCapChallenge சவாலை அமெரிக்க பாப் பாடகி மரியா கேரியும் எற்றுக் கொண்டார்.

கத்தியே பாட்டில் மூடியை தெறிக்கவிட்ட பாடகி- #BottleCapChallenge-ன் வின்னர் இவர்தாங்க!

ஜான் மேயர் (John Mayer) மற்றும் ஜேசன் ஸ்டாதம் (Jason Statham) போன்ற பிரபலங்கள் இந்த 'பாட்டில் கேப் சேலஞ்ச்'-ல் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டின் கோடை காலத்தில் சமூக தளங்களில் ஒரு சவால் பிரபலமானது, 'கீகி செலஞ்ச்'. கார் நகர்ந்து கொன்டிருக்குபோதே, அந்த காரின் கதவுகளை திறந்து கீழே இறங்கி 'கீகி' பாடலை பாட வேண்டும். பிரபலங்கள் பலர், இந்த சவாலில் ஈடுபட்டபின் இது வைரலானது. அதேபோல, இந்த ஆண்டும் 'பாட்டில் கேப் சேலஞ்ச்' (#BottleCapChallenge) என ஒரு சவால் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இந்த சவால் என்ன வென்றால், பாட்டிலின் மூடியை கால்களால் உதைத்து, அந்த மூடியை நீக்க வெண்டும். அதே நேரம், பாட்டிலும் கீழெ விழக்கூடாது. ஜான் மேயர் (John Mayer) மற்றும் ஜேசன் ஸ்டாதம் (Jason Statham) போன்ற பிரபலங்கள் இந்த 'பாட்டில் கேப் சேலஞ்ச்'-ல் ஈடுபட்டனர். அதன்பின், இந்த சவால் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

இந்த #BottleCapChallenge சவாலை அமெரிக்க பாப் பாடகி மரியா கேரியும் எற்றுக் கொண்டார். ஆனால், அவர் மூடியைத் திறக்க எந்த கால்களையும் பயன்படுத்தவில்லை. மாறாக, தனது மெர்சல் குரல் மூலம் ஹை-பிட்ச்சில் கத்தியே, பாட்டில் மூடியைத் தெறிக்கவிட்டார். இந்த வீடியோ, இணையத்தில் படுவைரலாக பரவி வருகிறது. பலரும் #BottleCapChallenge-ல், கேரிதான் வெற்றி பெற்றார் என்று கூறி வருகின்றனர். சிலரோ, மரியா கேரியின் வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். 
 

அந்த வீடியோவை நீங்களே கீழே பாருங்க:

மரியா கேரியின் #BottleCapChallenge-க்கு மக்களின் ரியாக்‌ஷன் இதோ:

முன்னதாக டேக்வேண்டோ பயிற்சியாளர் மற்றும் வீரரான ஃபராபி டேவ்லெட்சின் (Farabi Davletchin), முதன்முதலில் இந்த சவாலில் ஈடுபட்ட ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினார். அதன்பின் யு.எஃப்.சி ஃபெதர்வெயிட் சாம்பியனான மேக்ஸ் ஹோலோவே (Max Holloway) இந்த சவாலில் ஈடுபட்ட ஒரு வீடியோவை வெளியிட்டார். அதன்பின்தான், இந்த சவால் சமூக வலைதளங்களில் பிரபலமானது. 

Click for more trending news


.