This Article is From Nov 23, 2018

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண்!

தவாறாக கேட்கப்பட்ட 6 கேள்விகளுக்கு 9 கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
Tamil Nadu Posted by

தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறை இளநிலை அலுவலர், சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு 1,200 காலியிடங்களுக்கு பணியாளர் தேர்வாணயம் மூலம் குரூப் 2 போட்டித் தேர்வு கடந்த 11ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 2லட்சத்து 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

இந்த தேர்வுக்கான வினாத்தாளில் திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு இ.வெ.ராமசாமி நாயக்கர், காந்திஜி, ராஜாஜி, சி.என்.அண்ணாதுரை என பதில்கள் இருந்தன.

தந்தை பெரியாரின் பெயர் சாதிய அடையாளத்துடனும் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்து டிஎன்பிஎஸ்சி தேர்வாணயமும் தவறான கேள்விக்காக வருத்தம் தெரிவித்தது.

Advertisement

இதேபோல் 6 கேள்விகளுக்கு தவறான விடைகள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை 2 ஆயிரம் பேர் டி.என்.பி.எஸ்.சி.யிடம் முறையிட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று தவாறாக கேட்கப்பட்ட 6 கேள்விகளுக்கு 9 கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்தகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
Advertisement