This Article is From Jul 31, 2018

பூமிக்கு மிக அருகில், பளிச்சிட இருக்கிறது செவ்வாய் கிரகம்

செவ்வாய் கிரகம் பூமியில் இருந்து 35.8 மில்லியன் மைல்கள் (57.6 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் இருக்கும்

பூமிக்கு மிக அருகில், பளிச்சிட இருக்கிறது செவ்வாய் கிரகம்

ஜூலை 7-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை செவ்வாய் மிக பிரகாசமாக இருக்கும்

New Delhi:

பூமியும், செவ்வாய் கிரகமும் நாளை (ஜூலை 31-ம் தேதி) மிக அருகில் தோன்ற இருக்கின்றன. 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த் நிகழ்வு நடக்க இருக்கிறது. கடைசியாக 2003-ம் ஆண்டு இந்த நிகழ்வு நடந்தது. 

செவ்வாய் கிரகம் பூமியில் இருந்து 35.8 மில்லியன் மைல்கள் (57.6 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் இருக்கும். நள்ளிரவில், 5 டிகிரிகள் சென்று உச்சத்தில் இருக்கும். இரவு முழுவதும் செவ்வாய் கிரகம் கண்ணுக்கு தெரியும். கடந்த 60,000 ஆண்டுகளில் இல்லாத அளவு 2003-ம் ஆண்டு மிக அருகில் வந்தது குறிப்பிடத்தக்கது.

நாளை செவ்வாய் கிரகம் மிக அருகில் வர இருக்கிறது. செப்டம்பர் 12, 2035-ம் ஆண்டு செவ்வாய் கிரகமும், சூரியனும் பூமிக்கு நேர் எதிரில் தோன்ற இருக்கின்றன. அப்போது பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியன் மேற்கே மறையும் போது, செவ்வாய் கிழக்கில் தோன்றும். எனவே செவ்வாயும் சூரியனும் நேரெதிரே இருக்கும். பூமியம், செவ்வாயும் சரியான வட்டப்பாதையில் சுழன்று வந்தால், இரண்டு கோல்களும் இன்னும் அருகில் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில், செவ்வாய் கிரகம் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கும். ஏனெனில் அது பூமியை விட தூரமாக சென்றுவிடும். ஜூலை 7-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை செவ்வாய் மிக பிரகாசமாக இருக்கும். எந்த அளவுக்கு என்றால், மிகப் பிரகாசமாக தெரியும், வியாழன் கிரகத்தை விட பிரகாசமாக இருக்கும்.
நாளை தெரிய இருக்கும் செவ்வாய் கிரகத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். இப்போது தவற விட்டால் அடுத்ததாக 2020 அக்டோபர் 6-ம் தேதி தான் பார்க்க முடியும்.
 

.