This Article is From Jul 20, 2018

பூமிக்கு கீழ் பெரும் வைரம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

.பூமிக்கு கீழ், 145-240 கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள பகுதியில், இயற்கையாக வைரங்கள் உருவாகி இருக்கிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

பூமிக்கு கீழ் பெரும் வைரம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
Washington, United States:

வாஷிங்டன், அமெரிக்கா: பூமிக்கு அடியில் அளவற்ற வைரங்கள் புதைந்து உள்ளதாக மசாசூசெட்ஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்

 

பூமிக்கு கீழ், 145-240 கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள பகுதியில், இயற்கையாக வைரங்கள் உருவாகி இருக்கிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

 

“மனிதர்களால் எளிதாக செல்ல முடியாத அந்த இடத்தில் வைரங்கள் குவிந்து கிடக்கிறது. இதன் மூலம், அரிய வகை கனிம வளம் என்று கருதப்பட்ட வைரம், பிரபஞ்சத்தின் மற்ற பகுதிகளில் எளிதாக கிடைக்க கூடியதை கண்டறிய முடிந்தது” என்று உல்ரிச் பவுல் என்கிற விஞ்ஞானி தெரிவித்தார்

 

சீஸ்மிக் தொழில்நுட்பம் மூலம் கடந்து செல்லும் ஒலி அலைகளை வைத்து, பூமிக்கு கீழ் பதிந்துள்ள இந்த கனிம வளங்களை கண்டறிய முடியும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

பூமிக்கு கீழ் உள்ள பழங்காலத்து பாறைகளில், எதிர் பார்த்ததைவிட 1,000 மடங்கு அதிக அளவில் வைரம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். பத்து மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் எரிமலையால் பூமிக்கு அருகே வைரங்கள் வருகின்றன என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.