Read in English
This Article is From Jun 18, 2019

இப்படியொரு நிலச்சரிவா… மிரளவைக்கும் வீடியோ! #ViralVideo

கனமழை பெய்ததைத் தொடர்ந்து இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement
விசித்திரம் Edited by

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தினால் யாருக்கும் பெரிதாக காயம் ஏற்படவில்லையாம்.

சீனாவின் ஃபுஜியான் பிராந்தியத்தில் உள்ள ஊபிங் என்ற இடத்தில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவை தற்செயலாக ஒரு சிசிடிவி கேமரா படம் பிடித்துள்ளது. அந்த கேமரா படம் பிடித்த வீடியோ தற்போது ஆன்லைனில் வெளியாகி படுவைரலாக பரவி வருகிறது. 

வீடியோவில் இடது புறத்தில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்படுவது தெரிகிறது. இதைத் தொடர்ந்து கடல் அலை போல வரும் மணல், சாலையில் இருக்கும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களை கண் இமைக்கும் நேரத்தில் அடித்துச் செல்கிறது. ஊபிங்கில் இருக்கும் சியாங்ஷெங் சாலையில்தான் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து உள்ளூர் அவசரகால சேவை அமைப்புகள் உடனடியாக நிலச்சரிவு ஏற்பட்ட இடத்துக்கு விரைந்ததாக சொல்லப்படுகிறது. உடனடியாக அவர்கள் மீட்புப் பணியிலும் ஈடுபட்டனராம். இதனால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தினால் யாருக்கும் பெரிதாக காயம் ஏற்படவில்லையாம். 
 

Advertisement

வீடியோவை கீழே பாருங்கள்:

  .  

கனமழை பெய்ததைத் தொடர்ந்து இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement
Advertisement