This Article is From Apr 04, 2020

தனது மாணவர்களுக்கு கற்பிக்க ரிஸ்க் எடுத்த ஆசிரியர்! குவியும் பாராட்டுகள்!

ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுக்கு அதனையும் மீறு நேரில் கற்பிக்க முயன்றதால், அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

தனது மாணவர்களுக்கு கற்பிக்க ரிஸ்க் எடுத்த ஆசிரியர்! குவியும் பாராட்டுகள்!

தனது மாணவர்களுக்கு கற்பிக்க ரிஸ்க் எடுத்த ஆசிரியர்!

ஹைலைட்ஸ்

  • தனது மாணவர்களுக்கு கற்பிக்க ரிஸ்க் எடுத்த ஆசிரியர்
  • ஆன்லைன் மையமாக மாறிய பள்ளி, கல்லூரி வகுப்புகள்
  • சமூக விலகலை கடைபிடித்து மாணவருக்கு கற்பித்த ஆசிரியர்

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மையமாக மாறி வரும் நிலையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுக்கு அதனையும் மீறு நேரில் கற்பிக்க முயன்றதால், அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

கடந்த வாரம் தாகோட்டாவை சேர்ந்த கணித ஆசிரியர் கிரிஸ் வாபா, சமூக விலகலை கடைப்பிடித்து மாணவர் ஒருவரின் வீட்டின் முன்பு நின்று கண்ணாடி கதவுகள் வழியாக பாடம் எடுத்துள்ளார்.

கடந்த செவ்வாயன்று, தாக்கோட்டா மாநில தலைமை கால்பந்து பயிற்சியாளரான ஜோஷ் ஆண்டெர்சன் நெகிழ்ச்சியான புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். 6ம் வகுப்பு படிக்கும் அவரது மகளுக்கு தனது ஆசிரியரிடம் உதவி கோரியுள்ளார். அதைத்தொடர்ந்து, ஆசிரியர் கிரிஸ் வாபா அந்த மாணவியின் வீட்டு வாசலுக்கே நேரில் சென்று கண்ணாடி கதவுகள் மூன்பு நின்றபடி, அவரது சந்தேகங்களை தீர்த்து வைக்கும் பாடம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தையே அவர் பகிர்ந்திருந்தார். 

12 வயது மாணவியிடம் இருந்து மின்னஞ்சல் வந்ததை தொடர்ந்து, அவருக்கு மின்னஞ்சல் வாயிலாகவே அதில் பதில் தெரிவித்துள்ளார். எனினும், அந்த சிறுமிக்கு புரியவில்லை என்று தெரிவித்ததை தொடர்ந்து, தனது வெள்ளை போர்டுகளை எடுத்துக்கொண்டு அவரது சாலைக்கு சென்று அவருக்கு உதவியுள்ளார். 

எனது மகள் அவரது 6ஆம் வகுப்பு கணக்கு ஆசிரியருக்கு சில உதவிகள் கோரியிருந்தார். அதைத்தொர்ந்து, அவர் நேரில் வந்து வீட்டு வாசலில் நின்றபடி பாடம் எடுத்தார் என்று ஆண்டெர்சன் கூறியுள்ளார். 

அந்த புகைப்படத்தில் அந்த மாணவி நோட்டு புத்தகங்களுடன் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கூர்ந்து கவனித்து வருகிறார். ஆசிரியர் தனது வெள்ளை போர்டில் கணக்குகளை நிறைத்தபடி சாலையில் நிற்கிறார். 

இந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வெளியானதை தொடர்ந்து, பல கமெண்டுகளையும், லைக்குகளையும் பெற்று வருகிறது. 

பலர், இந்த வருடத்தின் சிறந்த ஆசிரியர்! அருமை! என்று பலர் பாராட்டியிருந்தனர். 

இதுதொடர்பாக வாபா, சிஎன்என்-செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், மாணவர்களுக்கு பாடங்களை தொலைபேசியில் புரிய வைப்பதை விட நேரில் என்னால் எளிதில் புரிய வைக்க முடியும். இதனால், மாணவர்கள் எளிதில் கற்றுக்கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன். 

நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் இது போன்ற ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், நாங்கள் அனைவரும் எங்கள் வகுப்பறையின் முன்னால் இருப்பதே மிகவும் வசதியானது என்று நான் நினைக்கிறேன், அங்குதான் நாங்கள் இருக்கவும் விரும்புகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Click for more trending news


.