Read in English
This Article is From Feb 24, 2020

டெல்லியில் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: காவலர் ஒருவர் பலி!

சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே நேற்றைய தினம் மோதல் வெடித்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகத் பாஜக தலைவர் கபில் மிஸ்ரா தலைமையில் பேரணி செல்ல முயன்ற போது இந்த வன்முறை சம்பவம் நிகழ்ந்தது.

Advertisement
இந்தியா Edited by
New Delhi:


டெல்லியில் வடகிழக்கு பகுதியான ஜாஃப்ராபாத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்து வந்த போராட்டத்தில் திடீர் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை சம்பவத்தில் தலைமைக் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

சிஏஏவுக்கு எதிரான நடந்த போராட்டத்தில் திடீரென ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, ஒருவருக்கொருவர் மாறி மாறி, கற்களை வீசி மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அந்த பகுதியே பெரும் போர்களம் போல காட்சியளிக்கிறது. 

இதுதொடர்பாக வெளியான காணொளி காட்சிகளில், ஒரு ஆட்டோ தீ வைத்து எரிக்கப்படுகிறது. மற்ற காட்சிகளில், கட்டிடங்களுக்கு தீ வைக்கப்படுகிறது. மற்றொரு வீடியோவில், சிவப்பு நிற சட்டை அணிந்த ஒருவர் கையில் துப்பாக்கியுடன் காவலரை நோக்கி ஓடி வருகிறார். 

இந்த வன்முறை சம்பவம் தொடர்பான மற்ற வீடியோக்களில், இந்த வன்முறையானது கபீர் நகரில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இந்த வன்முறை தொடங்குகிறது. இரு குழுவினர் மாறி மாறி கற்களை வீசிக் கொள்கின்றனர். இதில் ஒரு சில வீடியோக்களில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்புகின்றனர். 

Advertisement

முன்னதாக நேற்றைய தினம், ஜாஃப்ராபாத் அருகேயுள்ள மவுஜ்பூரில் ஆயிரக்கணக்கான பெண்கள் சி.ஏ.ஏ மற்றும், என்.ஆர்.சி ஆகியவற்றிலிருந்து விடுதலை வேண்டும் என்கிற முழக்கங்களை முன் வைத்து அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென அங்கு கலவரம் வெடித்தது.  

அதன் தொடர்ச்சியாக இன்றும் அதேபகுதியில் இந்த வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர டெல்லி போலீசார் கண்ணீர்புகைக்குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர். தொடர்ந்து, ராணுவத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வன்முறைச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இது "மிகவும் வருத்தமளிக்கும் செய்தி" என்று தெரிவித்துள்ளார். மேலும், "சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கவும், அமைதியும் நல்லிணக்கமும் பேணப்படுவதை உறுதிப்படுத்தவும்" டெல்லி காவல்துறையினர் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளனர் என்பதை தெரியப்படுத்தவும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் வலியுறுத்தினார்.

Advertisement

இதுதொடர்பாக அரசியல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ் தனது ட்வீட்டர் பதிவில், வன்முறை சம்பவம் தொடர்பாக பல்வேறு ஆர்வலர்கள் சார்பில் டெல்லி காவல்துறையிடம் முறையீடு செய்துள்ளார். 

மேலும், இந்த இனவாத வன்முறையை தடுக்க வடகிழக்கு டெல்லியில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அவர் டெல்லி போலீசாரை வலியுறுத்தியுள்ளார். 

Advertisement