हिंदी में पढ़ें Read in English
This Article is From Jul 26, 2019

மோடி ‘மெடிடேட்’ ந்னு சொல்லியிருப்பார், ட்ரம்புக்கு ‘மீடியேட்டு’ந்னு கேட்டுருக்கும் : கலாய்த்த சல்மான் குர்ஷித்

ஏன் மோடி தியானம் (meditate, மெடிடேட்) செய்யக்கூடாது என்று கேட்டிருக்கலாம். ட்ரம்ப் அதனை தலையீடு (mediate, மீடியேட) என்று கேட்டிருக்கலாம்” கிண்டலுடன் குறிப்பிட்டார்.

Advertisement
இந்தியா Edited by

புத்தக அறிமுகக் கூட்டத்தில் பேசினார்.

Mumbai:

காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட் ரம்ப் தலையிட இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேட்டதாக எழுந்த சர்ச்சை குறித்து காங்கிரஸ் தலைவரும் முன்னாள் வெளியுறவு அமைச்சரான சல்மான் குர்ஷித் கிண்டலாக பதிலளித்துள்ளார்.

மும்பையில் தன்னுடைய  "Visible Muslim, Invisible Citizen: Understanding Islam in Indian Democracy" என்ற புத்தகத்தின அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அவரிடம் கேட்டபோது “பிரதமர் மோடி ட்ரம்பை ‘ஏன் மோடி தியானம் (meditate, மெடிடேட்)  செய்யக்கூடாது  என்று கேட்டிருக்கலாம். ட்ரம்ப் அதனை தலையீடு (mediate, மீடியேட)  என்று கேட்டிருக்கலாம்”  கிண்டலுடன் குறிப்பிட்டார்.  

இது ஒரு தகவல்தொடர்பில்  ஏற்பட்ட சிக்கல் என்றும் கூறினார். 

Advertisement
Advertisement