This Article is From Apr 15, 2020

புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும்: நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

இதனிடையே, ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Edited by

புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும்: ரஜினிகாந்த் வாழ்த்து

இந்த புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும் என நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்.14ம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மே.3ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும், நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். 

தொடர்ந்து, சவால் நிறைந்தது வாழ்க்கை என்பதற்கு சட்டமேதை அம்பேத்கரின் வாழ்க்கையே உதாரணம் என்று அவர் அம்பேத்கர் வாழ்க்கையை மேற்கோள் காட்டினார். மேலும், ஏழை எளிய, ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்யுங்கள், ஊழியர்களை பணியிலிருந்து நீக்க வேண்டாம் என்பது உட்பட நாட்டு மக்களுக்கு 7 வேண்டுகோள்களை விடுத்திருந்தார். 

இதனிடையே, ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக மக்கள் இன்று வீட்டிலிருந்தபடியே தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கொரோனா தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது, 

Advertisement

இந்த புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும். இந்த துயரமான நேரத்தில் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள். 

அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை தவறாமல் கடைப்பிடித்துப் பாதுகாப்பாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுவும் கடந்து போகும் என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பதிவிட்டுள்ளார். 

Advertisement
Advertisement