This Article is From Nov 22, 2019

ராஜஸ்தானில் 21 வயதில் நீதிபதியாக பதவியேற்கவுள்ள இளைஞர்…!

ஐந்தாண்டு எல்.எல்.பி முடித்து ராஜஸ்தான் நீதித்துறை சேவைகள் தொடர்பான தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்

ராஜஸ்தானில் 21 வயதில் நீதிபதியாக  பதவியேற்கவுள்ள இளைஞர்…!

தனக்கு இளம் வயதில் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் மயாங்க் தெரிவித்தார்.

Jaipur:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 21 வயதான மயங்க் பிரதாப் சிங், நீதித்துறை சேவைகள் தொடர்பான தேர்வில் வெற்றி பெற்று விரைவில் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தஹ் 21 வயதான மயங்க் பிரதாப் சிங், ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு எல்.எல்.பி முடித்து ராஜஸ்தான் நீதித்துறை சேவைகள் தொடர்பான தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து விரைவில் அவர் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். இதன் மூலம் நாட்டின் இளம் வயது நீதிபதி என்ற பெருமை அவருக்கு கிடைக்கவுள்ளது. 

இதுகுறித்து ஏ.என்.ஐயிடம் பேசிய பிரதாப் சிங், “நீதிபதிகளுக்கு சமூகத்தில் இருக்கும் மரியாதை மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றைக் கண்டு நீதித்துறை சேவை மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதனால்தான் இந்த படிப்பை தேர்ந்தெடுத்து படித்தேன். இந்த தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற உறுதுணையாக இருந்த எனது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நீதித்துறை சேவைகளுக்கான தேர்வை எழுதுவதற்கான குறைந்தபட்ச வயது 23 ஆக இருந்தது. இதனை ராஜஸ்தான் அரசாங்கம் இந்த ஆண்டு முதல் 21 வயதாக குறைத்தது. இதன் மூலம் தனக்கு இளம் வயதில் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் மயாங்க் தெரிவித்தார். 

.