பாஜகவை வீழ்த்த பகுஜன் சமாஜ் பாடுபடும் என்று மாயாவதி அறிவித்துள்ளார்.
New Delhi: மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் மாயாவதி இன்று அளித்துள்ள பேட்டியில், “ பெரிய கூட்டணியில் இடம்பெற்று சீட்டுகளை கேட்டு பிச்சை எடுப்பதற்கு பதிலாக தனித்து நின்று போட்டியிட்டு விடலாம்” என்று கூறியுள்ளார்.
3 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் மாயாவதி கட்சி கூட்டணி வைக்கவில்லை. அதிக சிட்டுகளை மாயாவதி கட்சி கேட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் சம்மதிக்கவில்லை என்பதால் கூட்டணி முறிந்துள்ளது.
இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினரின் சுய மரியாதையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். அவர்கள் மீது காங்கிரசும், பாஜகவும் தொடர்ந்து துன்புறுத்தல் செய்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் ஆளும் பாஜகவை வெளியேற்ற தேவையான முயற்சிகள் அனைத்தையும் செய்வோம் என்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.