Read in English हिंदी में पढ़ें
This Article is From Apr 02, 2019

மக்கள் விரும்பியதாலே அரசு செலவில் எனது சிலையை வைத்தேன்! - மாயாவதி

பிஎஸ்பி கட்சியின் சின்னமான யானை மற்றும் மாயாவதி சிலைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

Advertisement
இந்தியா ,

Highlights

  • உ.பி.சட்டமன்றம் தலித் பெண்ணுக்கு மரியாதை காட்டும் விதமாகவே சிலை.
  • லக்னோ மற்றும் நொய்டாவின் பூங்காவில் மாயாவதி சிலைகள்
  • சிலைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
New Delhi:

மக்கள் விருப்பத்தின்படியே உத்தரபிரதேசத்தில் தான் முதல்வராக இருந்த போது அரசு செலவில் தனது சிலைகளை அமைத்ததாக மாயாவதி தனது செயலை நியாயப்படுத்தி உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

மேலும், கல்வி அல்லது மருத்துவமனைக்கு அந்த பணம் செலவழிக்கப்பட்டிருக்கலாமா இல்லையா என்பது விவாதத்திற்குரிய கேள்வி அதனை நீதிமன்றம் முடிவு செய்யமுடியாது என்று மாயாவதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த, 2008ல், உத்தரபிரதேச மாநில முதல்வராக பதவி வகித்த, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மாநிலத்தின் பல நகரங்களில் உள்ள பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில், பகுஜன் சமாஜ் கட்சி சின்னமான யானை மற்றும் தன் உருவத்தை சிலைகளாக வடிக்கச் செய்து, நிறுவினார்.

இதை எதிர்த்து, 2009ல், வழக்கறிஞர் ஒருவர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், 2007 முதல் 2012 வரை முதல்வராக இருந்த மாயாவதி பொதுமக்களின் வரி பணத்தில் தனது கட்சி சின்னத்தையும், தனது உருவத்தையும் சிலையாக வடிவமைத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின், இந்த வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

Advertisement

நொய்டாவில் யானை சிலைகள் மற்றும் மாயாவதியின் சிலைகள் அமைக்கப்பட்டதற்கு ஆன செலவை மாயாவதியே திரும்ப செலுத்த செய்யலாம் என யோசனை தெரிவித்துள்ளது. "மாயாவதி தனது சிலைகளிலும் கட்சி சின்னத்திலும் செலவழித்த பொது பணத்தை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் தற்காலிகமாக கருதுகிறோம்" என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு கூறியுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 22-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement