বাংলায় পড়ুন Read in English
This Article is From Jul 18, 2020

ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சியைக் கோரும் மாயாவதி! தொடரும் அரசியல் குழப்பம்!!

மாயாவதி, ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரைக்க வேண்டுமென கோரியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
இந்தியா Edited by

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ராஜஸ்தானில் உள்ள அசோக் கெஹ்லோட் அரசாங்கத்தை அவதூறாகப் பேசி ஜனாதிபதியின் ஆட்சியைக் கோரினார்

Lucknow:

ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவி வரும் தொடர் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி, ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரைக்க வேண்டுமென கோரியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் தனது எம்.எல்.ஏக்களை காங்கிரஸில் சேர்த்ததன் மூலம் இரண்டாவது முறையாக எங்களை அவர் ஏமாற்றியுள்ளார் என மாயாவதி தொடர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.

“சட்டவிரோத மற்றும் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட ஒரு காரியத்தைச் செய்தார் என்பதும் தெளிவாகிறது” என்று மாயாவதி இந்தியில் தொடர் ட்வீட்டுகளில் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். மேலும்,

Advertisement

“ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவும் அரசியல் உறுதியற்ற தன்மையை கணக்கில் கொண்டு, மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பரிந்துரைக்க வேண்டும். இதன் மூலமாக ஜனநாயகத்தை காக்க முடியும் என மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement