This Article is From Aug 26, 2019

காஷ்மீருக்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர்களை சாடும் மாயாவதி (Mayawati)- காரணம் என்ன?

ஜம்மூ காஷ்மீரில் எந்த மாதிரியான சூழல் நிலவி வருகிறது என்பதை அறிந்துகொள்ள காங்கிரஸின் ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சித் தலைவர்கள், கடந்த சனிக்கிழமை அங்கு சென்றனர்

காஷ்மீருக்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர்களை சாடும் மாயாவதி (Mayawati)- காரணம் என்ன?

காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 370வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்படதற்கும், அது ரத்து செய்யப்பட்ட விதத்திற்கும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. 

New Delhi:

உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் காஷ்மீருக்கு சென்றது குறித்து விமர்சனம் செய்துள்ளார். அவர், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படாத காரணத்தால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்ய வழிவகை ஏற்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளார். 

ஜம்மூ காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை மீண்டும் வரவேற்றுள்ள மாயாவதி, காஷ்மீருக்கு செல்வதற்கு முன்னர் எதிர்க்கட்சிகள் நன்றாக யோசித்து செயல்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

“சமீபத்தில்தான் காங்கிரஸ் மற்றும் சில கட்சிப் பிரமுகர்கள் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் காஷ்மீர் சென்றனர். அப்போது மத்திய அரசு, இந்த விவகாரத்தை முன்னிருத்தி அரசியல் செய்யவில்லையா? இதைப் போன்ற முடிவு எடுக்கும் முன்னர் அது குறித்து நன்கு சிந்தித்திருந்தால் சரியாக இருந்திருக்கும்,” என்று ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். 

அவர் 370 சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டது குறித்து, “பீம்ராவ் அம்பேத்கர், சம உரிமை, ஒற்றுமைக்கு ஆதரவாக இருந்தவர். அதனால்தான் அவர் சட்டப் பிரிவு 370-க்கு ஆதரவாக இருக்கவில்லை. அந்த காரணத்தினாலேயே பி.எஸ்.பி-யும் 370 ரத்துக்கு ஆதரவு தெரிவித்தது. கிட்டத்தட்ட 69 ஆண்டுகளாக 370 சட்டப் பிரிவு காஷ்மீரில் அமலில் இருந்தது. தற்போது அது நீக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கு நிலைமை சீராக சிறிது காலம் எடுத்துக் கொள்ளும். எனவே, அது குறித்து பொறுமை காப்பதுதான் நல்லது. அதைத்தான் நீதிமன்றமும் செய்து வருகிறது” என்றார். 

ஜம்மூ காஷ்மீரில் எந்த மாதிரியான சூழல் நிலவி வருகிறது என்பதை அறிந்துகொள்ள காங்கிரஸின் ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சித் தலைவர்கள், கடந்த சனிக்கிழமை அங்கு சென்றனர். ஸ்ரீநகருக்கு சென்ற அவர்களை, விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். 

ஜம்மூ காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கும், 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கும் பி.எஸ்.பி மட்டுமல்லாமல், பிஜூ ஜனதா தளம், அதிமுக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்டவையும் ஆதரவு தெரிவித்தன. இதனால்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 370 ரத்து குறித்தான மசோதாக்கள் சுலபமாக நிறைவேறின. 

அதே நேரத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 370வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்படதற்கும், அது ரத்து செய்யப்பட்ட விதத்திற்கும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. 

.