This Article is From Feb 28, 2020

''டெல்லி வன்முறை தொடர்பான விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்'' - மாயாவதி

டெல்லியில் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும் என்றால், காவல்துறை செயல்படுவதற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

''டெல்லி வன்முறை தொடர்பான விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்'' - மாயாவதி

டெல்லியில் ஏற்பட்டிருக்கும் வன்முறை 1984-ல் நடந்த சீக்கிய கலவரத்தை நினைவுபடுத்துகிறது என்கிறார் மாயாவதி.

ஹைலைட்ஸ்

  • ''டெல்லி போலீசார் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும்''
  • 'வன்முறை பயன்படுத்தி சில கட்சிகள் கீழ்த்தனமாக அரசியலை செய்கின்றன'
  • 'வன்முறையை தூண்டும் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'
New Delhi:

டெல்லி வன்முறை தொடர்பாக நடத்தப்படும் விசாரணையை உச்ச நீதிமன்றம் மேற்பார்வையிட வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். 

வடகிழக்கு டெல்லியில் கலவரம் ஏற்பட்டிருக்கும் சூழலில் அதனால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பை மத்திய அரசும், டெல்லி ஆம் ஆத்மி அரசும்தான் ஈடுகட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் சட்டம் ஒழுங்கு காக்கப்பட வேண்டும் என்றால் அங்கு காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்றும் மாயாவதி கூறியிருக்கிறார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 'டெல்லியில் ஏற்பட்டிருக்கும் வன்முறை 1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தை நினைவுபடுத்துவது போல் உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

வன்முறையில் சில கட்சிகள் கீழ்த்தரமாக ஆதாயம் தேடிக் கொள்கின்றன. இதனை அரசியல்கட்சிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கலவரம் தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்றம் மேற்பார்வையிட வேண்டும். 

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் பாஜக தலைவர்கள் மீது அக்கட்சி கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும்.' என்று கூறியுள்ளார். 

டெல்லி கலவரம் தொடர்பாக மாயாவதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதவுள்ளார்.

வடகிழக்கு டெல்லி பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் கடந்த ஞாயிறன்று தொடங்கியது. இதில் 38 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 

.