This Article is From Jul 24, 2019

கல்லூரி விடுதியை கதைக்களமாகக்கொண்டு உருவாகி இருக்கும் படம் “மயூரன்”

எது நியாயம் எது தர்மம் அது கொடுக்கும் அடுத்த வினாடி ஆச்சரியம் தான் வாழ்க்கை

கல்லூரி விடுதியை கதைக்களமாகக்கொண்டு உருவாகி இருக்கும் படம் “மயூரன்”

ஹைலைட்ஸ்

  • பாலாவின் நந்தா, பிதாமகன் படத்தில் உதவி இயக்குநாக இருந்தவர் இவர்
  • இப்படத்தில் கூத்து பட்டரையில் உள்ள கலைஞர்கள் பலர் நடித்துள்ளனர்
  • ஆகஸ்ட் 2ல் இப்படம் வெளியாக இருக்கிறது

இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளியான ‘நந்தா',' பிதாமகன்', போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய  நந்தன் சுப்புராயன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘மயூரன்'.

கல்லூரி விடுதியில் நடக்கும் சம்பவங்களை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் வேளராமமூர்த்தி, ஆனந்த்சாமி, அமுதவாணன், அஸ்மிதா உள்ளிட்ட கூத்து பட்டரைசேர்ந்த குணசித்திர நடிகர்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ob7qek38

இப்படம் குறித்து பேசிய இப்படத்தின் இயக்குநர் நந்தன் சுப்புராயன்,

“மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே நிர்பந்தங்களும் நெருக்கடிகளும் ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாகத்தான் இருக்கிறது. நிர்பந்தங்கள் இல்லாதவர்கள் அதிர்ஷ்டசாலிகள் நிர்பந்தத்திற்கு பணி யாதவர்கள் போராளிகள். இங்கு அதிர்ஷ்டசாலி களைவிட போராளிகளே அதிகம். நியாயத்தின் பக்கம் நிற்கும் யாவர்க்கும் அதிகாரம் படைத்தவர்களின் பரிசு எப்போதும் உயிர் பயம் காட்டுவது தான், அதற்கு நல்லவர்கள் கொடுக்கும் விலை தனிமை... யார் கண்ணிலும் படாத தலைமறைவு வாழ்க்கை... மற்றும் உனக்கு எதுக்கு வம்பு எனும் அறிவுரைகள் மட்டும்தான்.

niholm6

சொல்லிக்கொடுக்கப்பட்ட மரபுகளிலிருந்து விலகி நிற்பவனை உலகம் வேறுவிதமாகத்தான் பார்க்கிறது. மயூரன் விரைந்துன்னை காக்க வருபவன் என்று பொருள்படும்,  இன்னொரு இடத்தில் வெற்றி புனைபவன் என்றும் சொல்லலாம்.

கல்லூரி விடுதி தான் கதைக்களம். என்னால் எதுவும் செய்ய முடியும் என எழுச்சியூட்டும்  பருவத்தினர் ஒட்டுமொத்தமாக வசிக்கும் ஒரு சமூகம்.ஒரு தேசம்.

sfropkr8

அடர்ந்த வனங்களில் காணப்படும் பல்வேறு தாவரங்கள் போன்றவர்கள். ஒன்று மரம், ஒன்று செடி, ஒன்று கூடி. ஒரே நிலத்தில் வாழ்ந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம். இங்கே சந்திக்கும் முகங்கள் இயல்பாய் பழகும் நட்பையும் உருவாக்குகிறது,  எதிரான எண்ணம் கொண்டவர்களிடம் குரோதமும், பகையும் வளர்க்கிறது. என் எண்ணம், என் விருப்பம் என்பதைத் தாண்டி, எது நியாயம் எது தர்மம் அது கொடுக்கும் அடுத்த வினாடி ஆச்சரியம் தான் வாழ்க்கை. முடிந்தவரை நியாய  உணர்வுகளை அலங்காரம் இன்றி சொல்லியிருக்கும் படம் தான் மயூரன்.

படம்  ஆகஸ்ட் 2  ஆம் தேதி தயாரிப்பாளர் H.முரளி அவர்கள் Banner மூலமாக வெளியிட பட உள்ளது.  என்றார் இயக்குனர் நந்தன் சுப்பராயன்.

.