Read in English
This Article is From Dec 21, 2018

ஜின்னா வீட்டை வெளியுறவுத்துறைக்கு மாற்றச் சொல்லும் சுஷ்மா சுவராஜ்!

பிரதமர் அலுவலகம் இந்தக் கட்டடத்தை அமைச்சக கட்டுப்பாட்டுக்கு மாற்ற உத்தரவிட்டது.

Advertisement
இந்தியா

பிரதமர் அலுவலக ஒப்புதலால் உரிமை யாருடையது என்ற சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. (File)

Mumbai:

வெளியுற‌வுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது அமைச்சகத்தின் கீழ் மும்பையில் கடல் நோக்கியுள்ள, பாகிஸ்தான் நிறுவனரான முகமது அலி ஜின்னாவுக்கு சொந்தமான பங்களாவை கையகப்படுத்த உள்ளதாக கடிதம் எழுதியுள்ளார்.

பாஜக பிரதிநிதியான மங்கள் ப்ரகத் லோதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்தப் பங்களாவை டெல்லியில் உள்ள ஹைத்ராபாத் கட்டடத்தை மாற்றியது போல இதையும் சீரமைக்க வேண்டும். மேலும் இதன் பெயரை மாற்ற‌ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

"அக்டோபர் 5ம் தேதி ஜின்னா ஹவுஸை கலாச்சார மையமாக மாற்ற வேண்டும்" என்று கடிதம் எழுதினார். பின்னர் பிரதமர் அலுவலகம் இந்தக் கட்டடத்தை அமைச்சக கட்டுப்பாட்டுக்கு மாற்ற உத்தரவிட்டது. டிசம்பர் 5ம் தேதி எழுதியுள்ள கடிதத்தின் படி இதன் உரிமையை மாற்றும் வேலைகளை முடிக்கவுள்ளதாக கூறியுள்ளது.

பிரதமர் அலுவலக ஒப்புதலால் உரிமை யாருடையது என்ற சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. தற்போது இந்த வீடு ஹைத்ராபாத் ஹவுஸை போல தயார் செய்யப்படவுள்ளது என்று கூற‌ப்பட்டுள்ளது.

Advertisement

ஜின்னா இந்த வீட்டில் 1930களில் வாழ்ந்துள்ளார். பாகிஸ்தான் அரசு சமீபத்தில் இந்த வீட்டை தனது மும்பையில் உள்ள அமீரகத்துக்காக அளிக்குமாறு கேட்டது. 

இந்தக் கட்டடம் முன்பே இது பிரிவின் அடையாளம் என்று கூறி அழிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பு கூறுகிறது.

Advertisement
Advertisement