Read in English
This Article is From Apr 18, 2019

மதுரை சித்திரை திருவிழா: தேரோட்டம் தொடங்கியது

தீபாராதனைக்கு பிறகு காலை 5 : 45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முதலில் சுவாமி சுந்தரேசுவரர், உள்ள பெரிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

Advertisement
தமிழ்நாடு Translated By

மீனாட்சி திருக்கல்யாணத்தை 1.5 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Madurai:

மதுரை சித்திரை திருவிழாவில் 1.5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு நேற்று மீனாட்சி திருக்கல்யாணத்தை தரிசித்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 8 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று ( புதன்கிழமை) நடந்தது. 

திருவிழாவின் 11-ம் நாளான இன்று தேரோட்டம் இன்று காலை 5:30 மணிக்கு மேல் தொடங்குகிறது. இதற்காக கீழமாசி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த தேர்களில் பிரியாவிடை யுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் ஆகியோர் இன்று அதிகாலை எழுந்தருளினர். அதிகாலையிலிருந்தே பக்தர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர் .

தீபாராதனைக்கு பிறகு காலை 5 : 45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முதலில் சுவாமி சுந்தரேசுவரர், உள்ள பெரிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

Advertisement

வெயிலின் தாக்கத்தைக் குறைக்க பக்தர்களுக்கு தண்ணீர், மோர் போன்ற பானங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

சித்திரை திருநாள் கோடியேற்றத்துடன் தொடங்கி பட்டாபிஷேகம், திக்விஜயம், மீனாட்சி கல்யாணம், தேரோட்டம் மற்றும் எதிர் சேவை ஆகிய  நிகழ்ச்சிகள் நடக்கும்.

Advertisement
Advertisement