This Article is From Dec 17, 2019

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் இணைய சேவைகள் ரத்து

மாணவர்களின் போராட்டம் வன்முறையில் முடிந்ததையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில்  இணைய சேவைகள் ரத்து

ஜனவரி 5 அன்று பல்கலைக்கழகம் திறக்கப்படும் (Representational)

Meerut, Uttar Pradesh:

சட்டம் ஒழுங்கை பராமரிக்க உத்தர பிரதேச த்தின் மீரட் மாவட்டத்தில் இணைய சேவைகள் திங்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாஜிஸ்திரே அனில் திங்கரா தெரிவித்தார். 

அலிகாரிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 

“அலிகார் நகரில் ஞாயிற்றுக் கிழமை இரவு 10மணி முதல் இரவு 10 மணி வரை இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன” என்று மாவட்ட மாஜிஸ்திரே சந்திர பூஷன் சிங் உத்தரவை பிறப்பித்துள்ளார். 

மாணவர்களின் போராட்டம் வன்முறையில் முடிந்ததையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

“சமூவ விரோத குழுக்கள் இணையத்தை பயன்படுத்தி சமூக விரோத கருத்துகள் மூலம் மக்களை தூண்டிவிடும் என்பதை மறுக்க முடியாது. எனவே இரவு 10 மணி முதல் நாளை இரவு 10 மணிவரை இணைய சேவைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். 

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களையடுத்து அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் 3 வாரங்கள் மூடப்பட்டுள்ளது என்று பதிவாளர் அப்துல் ஹமீத் தெரிவித்தார். ஜனவரி 5 அன்று பல்கலைக்கழகம் திறக்கப்படும் என்றும் பின்னர் தேர்வுகள் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.