This Article is From Jun 15, 2018

72 வயதில் அசத்தும் “சூப்பர் பாட்டி” - வைரலான வீடியோ

எனது மகளுக்கு விபத்து ஏற்பட்ட போது, செலவுகளுக்காக வாங்கிய கடனை அடைக்க தான் இந்த பணி செய்கிறேன் என்கிறார் லக்‌ஷ் பாய்

72 வயதில் அசத்தும் “சூப்பர் பாட்டி” - வைரலான வீடியோ

A video of 'superwoman' stenographer Lakshmi Bai, 72, from Madhya Pradesh's Sehore went viral this week

ஹைலைட்ஸ்

  • கடனை அடைக்க பணி செய்வதாக கூறுகிறார் லக்ஷ்மி பாய்
  • ஆட்சியர் உதவியால் பணி இவருக்கு வேலை கிடைத்துள்ளது
  • இவர் ஒரு சூப்பர் வுமன் என சேவாக் ட்வீட்
Sehore, Madhya Pradesh:

 

வயது என்பது வெறும் எண் மட்டும் என்பதை நிரூபித்துள்ளார், மத்திய பிரதேச மாநிலம் சேஹோரைச் சேர்ந்த 72 வயது சூப்பர் பாட்டி லக்‌ஷ்மி பாய். சேஹோர் ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில், பத்திரங்களை டைப் செய்து தரும் பணியில் ஈடுபட்டு வரும் அவரது வீடியோ, சமீபத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸாப் என வைரலானது. அசாத்திய வேகத்தில், டைப் செய்யும் பாட்டியின் அந்த வீடியோவைப் பார்த்த, முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், சூப்பர் வுமன் என ட்வீட் செய்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சூப்பர் பாட்டி, சூப்பர் வுமன் என் அவர் புகழப்பட அவரது வேகம் மட்டும் காரணம் அல்ல. அதையும் தாண்டி 72 வயதிலும் உழைக்க வேண்டும் என்ற அவரின் முயற்சியும், இதில் கிடைக்கும் வருமானம் மூலம் அவர் செய்ய நினைக்கும் கடமையும் தான்.

“ எனது மகளுக்கு விபத்து ஏற்பட்ட போது, செலவுகளுக்காக வாங்கிய கடனை அடைக்க தான் இந்த பணி செய்கிறேன். கடனை அடைக்க என்னால் பிச்சை எடுக்க முடியாது. ஆட்சியர் ராகவேந்திர சிங் மற்றும் சப் டிவிஷன் மாஜிஸ்திரேட் பாவனா விளமே ஆகியோரின் உதவியால் தான் இந்த பணி கிடைத்தது” என்று தள்ளாத வயதிலும், ஆர்வமாக உழைத்து வரும் லக்‌ஷ்மி பாய் கூறுகிறார்.

லக்‌ஷ்மி பாயின் வீடியோவை ட்வீட்டி பதிவிட்ட சேவாக் “ இவர் ஒரு சூப்பர் வுமென். இந்திய இளைஞர்கள் இவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. அவரது வேகம் மட்டும் அல்ல, எந்த வேலையும் சிறியது அல்ல, கற்றுக் கொள்ள எந்த வயதும் பெரியதல்ல என்ற அவரது எண்ணத்தை கற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.

 

A superwoman for me. She lives in Sehore in MP and the youth have so much to learn from her. Not just speed, but the spirit and a lesson that no work is small and no age is big enough to learn and work. Pranam ! pic.twitter.com/n63IcpBRSH

சேவாக்கின் இந்த ட்வீட் வைரலானது. பலரும் லக்‌ஷ்மி பாய் தன் விடா முயற்சி மூலம் எங்களை ஈர்க்கிறார் என்று பதிவிட்டிருந்தனர். தனது வீடியோவை பதிவிட்ட சேவாக்குக்கு நன்றி தெரிவித்துள்ளார் லக்‌ஷ்மி பாய்.

 

இந்த வீடியோவை  முதலில் ஹத்திந்தர் சிங்க் என்பவர் ஜூன் 10-ம் தேதி பதிவிட்டிருந்தார். ஜூன 12-ம் தேதி சேவாக் வீடியோவை பதிவிட, வீடியோ வைரலானது.  

.