செங்கமலம் யானை தனது பாப் வெட்டு சிகை அலங்காரத்திற்கு பிரபலமானது.
உண்மையில் மனிதனுக்கும் யானைக்குமான தொடர்பு மிக நீண்ட வரலாறு கொண்டது. ஒரு யானையை பழக்கி கும்கி யானையாகவோ அல்லது வளர்ப்பு யானையாகவோ மாற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனாலும் மனிதன் யானையை வெற்றிகரமாக வளர்க்கத் தொடங்கிவிட்டான்.
இதன் நீட்சியாக மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி கோவிலில் வளர்க்கப்படும் யான தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதற்கான காரணம் அதனுடைய சிகை அலங்காரமே. பாப் கட்டிங்கில் சிறப்பாக தோற்றமளிப்பதனாலேயே இது வைரலாகி விட்டது. தற்போது இந்த யானை . "பாப்-கட் செங்கமலம்" என அழைக்கப்படுகிறது. . "பாப்-கட் செங்கமலத்தின் வீடியோவை இந்திய வன சேவை அதிகாரி சுதா ராமன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
செங்கமலம் 2003 ல் கேரளாவிலிருந்து ராஜகோபாலசாமி கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. செங்கமலத்தின் சிகை அலங்காரத்திற்கும் பராமரிப்புக்கும் அதிகமான செலவுகள் ஆகின்றன என யானை பாகன் ராஜகோபால் கூறுகிறார்.
யதார்த்தமாக ஒரு வீடியோவில் யானை குட்டிக்கு வித்தியாசமான சிகை அலங்காரத்தினை பார்த்ததைத் தொடர்ந்து தன்னுடைய யானைக்கும் வித்தியாசமான சிகை அலங்காரத்தினை முயன்று பார்த்ததாக ராஜகோபால் கூறியுள்ளார்.
மேலும், செங்கமலத்தினை கோடை காலத்தில் குளிப்பாட்ட 45 ஆயிரம் ரூபாய் செலவில் ஷெவர் ஒன்றினையும் ராஜகோபால் தயார் செய்துள்ளார்.
யானையின் முடியும், காதுகளும் அதன் உடல் வெப்பத்தினை குறைப்பதில் முக்கியப்பங்காற்றுகின்றன.