This Article is From Nov 12, 2019

73 வயதில் ‘Bikini Body Champion’- இள வயதுப் பெண்களை பொறாமைப்பட வைக்கும் ஃபிட்னஸ்- ரகசியம் என்ன?

வாரத்துக்கு 3 முறை உடற்பயிற்சிகளை மேற்கொண்ட மரியா, கார்டியோவிற்குத் தனியாக நேரம் ஒதுக்கியுள்ளார். 

73 வயதில் ‘Bikini Body Champion’- இள வயதுப் பெண்களை பொறாமைப்பட வைக்கும் ஃபிட்னஸ்- ரகசியம் என்ன?

2017 ஆம் ஆண்டு, ஃபிட்டாக ஆன மரியா, நிறைய ஃபிட்னஸ் மாடலிங் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

தனது 69 வயதில் உடற்பயிற்சிகளை ஆரம்பித்த பெண் ஒருவர், தனது 73 வயதில் ‘Bikini Body Champion'- ஆக சாதித்திருக்கிறார். அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தைச் சேர்ந்த மரியா கிறிஸ்டினாதான், இந்த புருவம் தூக்கவைக்கும் சாதனைக்குச் சொந்தக்காரர். டெய்லி மெயில் செய்தி நிறுவனம் அளித்த தகவல்படி, இள வயதில் மரியா மிகவும் துடிப்பாக இருந்தாராம். ஆனால், தனது 50-வது வயதுக்குப் பிறகு, உடல் பருமனாகவும், மன உளைச்சல் மிக்க நபராகவும் மாறிவிட்டாராம். ஆனால், 50 வயதுக்குப் பிறகு ஆரோக்கியத்தின் மீது அக்கறை எடுக்கத் தொடங்கியுள்ளார் மரியா.

பணி ஓய்வு பெற்ற பிறகு, 69 வயதில் உடற்பயிற்சிகளுக்கு ஒருவரிடம் ஆலோசனை பெற்றுள்ளார் மரியா. அதுதான் அவரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்துள்ளது. வாரத்துக்கு 3 முறை உடற்பயிற்சிகளை மேற்கொண்ட மரியா, கார்டியோவிற்குத் தனியாக நேரம் ஒதுக்கியுள்ளார். 

2017 ஆம் ஆண்டு, ஃபிட்டாக ஆன மரியா, நிறைய ஃபிட்னஸ் மாடலிங் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அவரைவிட பாதி வயது குறைவான பெண்களுடன் போட்டி போட்ட மரியாவிற்கு, கலந்து கொண்ட முதல் போட்டியிலேயே 6 பதக்கங்கள் கிடைத்துள்ளன. 

“நான் போகும் ஃபிட்னஸ் போட்டிகளில், 80 வயதாகும் ஆண்கள் போட்டிக்கு வருகிறார்கள். ஆனால் பெண்கள், 50 வயதுக்குப் பிறகு அதிகமாக வருவதில்லை. நான் 73 வயதில் போட்டியிடுவதைப் பார்த்த பின்னர், நிறைய பெண்கள் போட்டிகளில் கலந்து கொள்ள வருவார்கள் என நம்புகிறேன்,” என்று கூறி முன்னுதாரணமாக திகழ்கிறார் மரியா. 

Click for more trending news


.