Narwhal the puppy was born with an extra tail on his forehead.
அமெரிக்காவில் மிசோரியில் பிறந்து 10 வாரங்களே ஆன நாய்க்குட்டி ஒன்றிற்கு நெற்றியின் நடுவில் கூடுதலாக ஒரு வால் வளர்ந்துள்ளது. மேக்ஸ் மிஷன் என்படும் லாப நோக்கமற்ற அமைப்பு கைவிடப்பட்ட நாயினை மீட்டுள்ளது.
தற்போது இணையத்தில் இந்த நாயின் புகைப்படம் வைரலாகியுள்ளது. பலரும் இதனை யூனிகார்ன் என்று குறிப்பிடுகின்றனர். கூடுதல் வாலுடன் வளர்ந்து வரும் இந்த நாய் காலில் காயத்துடன் கைவிடப்பட்டிருந்தது. நேற்றியில் உள்ள வாலை நாய் அசைப்பதில்லை என்று மேக் மிஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேக்ஸ் மிஷனை இயக்கும் ரோசெல் ஸ்டெஃபென் பிபிசியிடம் நாய்க்குட்டி இந்த வாலினால் வலியேதும் ஏற்படவில்லை என்றும் பல மணிநேரம் விளையாடுகிறது என்று கூறியுள்ளார். நாயினை பாதுக்காக்கும் அந்த அமைப்பில் உள்ள நபர் தனது 16 வருட அனுபவத்தில் இப்படி ஒரு நாய்க்குட்டியை பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.
“இந்த கூடுதல் வாலை நீக்கத் தேவையிருக்காது” என்று மேக்ஸ் மிஷன் அமைப்பு பிபிசியிடம் தெரிவித்துள்ளது. இந்த கூடுதல் வால் நாய்க்கு உண்மையிலேயே பிரச்சினையாகவோ தொந்தரவாகவோ மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
Click for more
trending news