பலரும் ரூபிக்குப் பாராட்டு தெரிவித்தும், கொஞ்சியும் கருத்திட்டு வருகின்றனர்.
கனடாவைச் சேர்ந்த ஒரு நாய், தற்போது உலகம் முழுக்க பேசு பொருளாக மாறியுள்ளது. மனிதர்களே சக மனிதர்களுக்கு அன்பு காட்டத் தயங்கும் காலத்தில், ரூபி என்னும் இந்த நாய், சக நாய்களைத் தட்டிக்கொடுத்து, அரவணைத்து அன்பு காட்டுகிறது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெய்லி ஸ்டார் என்னும் செய்தி நிறுவனம் அளிக்கும் தகவல்படி, ரூபியின் உரிமையாளர், கனடாவைச் சேர்ந்த அலனா லோரானி. அவர்தான், ரூபி குறித்த வீடியோவை டிக் டாக் தளத்தில் முதன்முதலாக பகிர்ந்துள்ளார். “ரூபி, எப்போதும் நட்பைத் தேடுவான்!” என்று பதிவிட்டு டிக் டாக்கில் லோரானி பகிர்ந்த வீடியோதான் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
லோரானியின் வீடியோவை ட்விட்டரில் ‘வீ ரேட் டாக்ஸ்' என்னும் பிரபல பக்கம் பகிர்ந்தது. அவ்வளவுதான் இணைய உலகமே ரூபியைக் கொண்டாடத் தொடங்கிவிட்டது.
கொரோனா, ஊரடங்கு என்று கடும் மன உளைச்சலில் இருந்தீர்கள் என்றால் இந்த வீடியோவைப் பாருங்கள்:
இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டது. இதுவரை 74 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. 4.5 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை அள்ளியுள்ளது. 90,000 பேர் இந்தப் பதிவை ரீ-ட்வீட் செய்துள்ளனர். பலரும் ரூபிக்குப் பாராட்டு தெரிவித்தும், கொஞ்சியும் கருத்திட்டு வருகின்றனர்.
சிலர் தங்களின் செல்லப் பிராணிகளின் படங்களையும் பகிர்ந்து அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்:
Click for more
trending news